29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
hair
தலைமுடி சிகிச்சை

பளபளக்கும் கூந்தல் வேணுமா?

கூந்தல் வறட்சி, கூந்தல் பிசுபிசுப்பு, வறண்ட கூந்தல், பொலிவிழந்த கூந்தல், கூந்தல் உதிர்வு, கூந்தல் நுனி உடைந்து போதல் இப்படி ஏதேனும் ஒரு பிரச்னையில்லாத பெண்களைப் பார்க்கவே முடியாது. அதனால் தான் கூந்தல் பராமரிப்பு என்று படித்தாலும் கேட்டாலும் எத்தனை பெரிய வேலையாக இருந்தாலும் அதையெல்லாம் விடுத்து செய்து பார்த்துவிடுவார்கள். இது ஒரு புறம்..

hair

வெந்தயமும், வெட்டிவேரும் கலந்த சீயக்காயைத் தலையில் தேய்த்துக்குளித்த காலங்களிலெல்லாம் கூந்தல் உதிராமல் பொலிவோடு நீண்டு பெண்களின் அழகைக் கூட்டியது. சீயக்காய் குளியலை அவசர காலத்தில் பயன்படுத்த முடியாமல் போனதால் பெண்கள் ஷாம்புகளுக்கு மாறினார்கள். பிறகு ஈரக்கூந்தலைக் காயவைக்க ஹேர் டிரையர் பயன்பாட்டுக்கு வந்தது. இவற்றின் பயனாக கூந்தல் வலுவிழந்தது.

புதிய புதிய ஷாம்பு வகைகள், கூந்தலை மென்மையாக்க கண்டிஷனர் எல்லாம் வரத்தொடங்கியதும் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்கள் அனைத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவார்கள். குறிப்பாக பொடுகு பிரச்னை இன்று தலையாய பிரச்னையாய் பாடாய்படுத்துகிறது.

கூந்தலை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் வெளியில் சென்று திரும்பும்போது காற்றில் படியும் மாசுக்கள் கூந்தலில் தங்கிவிடுகின்றன. இவையே அழுக்காக படிந்து பொடுகை உண்டாக்குகின்றன. இவற்றை நீக்கி கூந்தலை பராமரிக்காவிட்டால் தலையில் அரிப்பு, சிறு சிறு செதிலாய் படிகின்றது இவை கூந்தலை வறண்டு போகச் செய்வதோடு கூந்தலை வலுவிழக்கவும் செய்து வளர்ச்சியைத் தடுக்கிறது. கூந்தலின் பளபளப்பையும் குறைத்து முடி உதிர்தலை அதிகப்படுத்துகிறது.

பொடுகை விரட்ட அதிக செலவு தேவையில்லை.. வீட்டில் இருக்கும் எளிய பொருள்களைக் கொண்டே பொடுகை விரட்டலாம்..

ஒருபிடி வேப்பிலையுடன் 3 டீஸ்பூன் தயிர், சாம்பார் வெங்காயம் 4, வால் மிளகு சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். பிறகு தலையில் அடி முதல் நுனிவரை தேய்த்து கால்மணிநேரம் கழித்து நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். மாதமிருமுறை இப்படி செய்தால் பொடுகு தொல்லையோடு பேன் தொல்லையும் ஒழியும்…

இரவு வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் அம்மியில் அரைத்து தலைக்குத் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கெட்டியான பசுந்தயிரைப் புளிக்க வைத்து தலையின் வேர்ப்பகுதியில் ஆழ தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து குளித்தால் பொடுகு நீங்கும். கெட்டித்தயிரோடு சிறிது ஊறவைத்து அரைத்த வெந்தயத்தையும் சேர்க்கலாம். ஆனால் இரண்டுமே குளிர்ச்சி தருவதால் தனித்தனியாக உபயோகிப்பதே நல்லது..

இது கோடைக்காலம் என்பதால் வாரம் ஒருமுறையாவது இதைச் செய்து பாருங்கள். பொடுகு ஓடிவும். பொடுகு ஓடினால் கூந்தல் வளர்ச்சியடையும். கூந்தல் வளர்ந்தால் பளபளப்பு கூடும்.

Related posts

தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்யும் ஆளிவிதை ஜெல்!! ஒரு சூப்பர் டிப்ஸ்!!

nathan

வேப்பம்பூ- பொடுகு பிரச்னை தீரும் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கட்டுக்கடங்காமல் முடி வளர்வதற்கு 1 ஸ்பூன் கிராம்பு போதும்.தெரிந்துகொள்வோமா?

nathan

அதிகமா தலைமுடி உதிருதா? அப்போ இத கட்டாயம் பயன்படுத்துங்க!!!

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்

nathan

முடி உதிர்வதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

nathan

உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? அப்ப இத படிங்க!…

nathan

தெரிஞ்சிக்கங்க…இளநரையை போக்கும் மூலிகை தைலம்

nathan

பொடுகு தொல்லையா?

nathan