* சத்தான உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் தொப்பை குறையாது. உதாரணமாக பேலியோ டயட் கடைபிடிப்போர் நட்ஸ், முழுதானியங்கள் சாப்பிட வேண்டும்.
ஆனால் இதையே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
* ஜிம் பயிற்சி அவசியம்தான். ஆனால் இதனை அதிகமாக செய்யும்போது அதிகமாக பசி எடுக்கும். இதனால் அதிகமாக சாப்பிட்டால் தொப்பை குறையாது.
* இது மிகவும் ஆபத்தானது. உடல் இயக்கத்துக்கு கலோரிகள் மிக அவசியம். உடல் எடையை குறைக்கிறேன் என்று சாப்பிடாமல் இருப்பது தவறு.
அவ்வப்போது சிறிய நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டு நாள் முழுக்க வயிற்றை நிரப்புவது கூடாது. இவ்வாறு செய்வது உடல் எடையை அதிகரிக்கும்.
* இதனை பலர் செய்திருப்பார்கள். வேலை மும்மரத்தில் எவ்வளவு சாப்பிடுகிறோம் எனத் தெரியாமல் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும்.
சாப்பாடு நேரத்தில் மட்டுமே சாப்பிடவேண்டும். வேலை நேரத்தில் கொறிக்கும் பழக்கத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.