28 C
Chennai
Saturday, Dec 13, 2025
pregnent 2
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை!….

கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

pregnent 2

கர்ப்ப கால மிகை வாந்தி நோய்

சாதாரணமாகக் கர்ப்பிணித் தாய்மார்கள் முதல் சில வாரங்களுக்கு வாந்தி எடுப்பார்கள். காலை வேளைகளில் இது ஓரிரு முறை இருக்கும். தாய்மார்களின் உடல் நிலையினை இது பாதிக்காது.

இவர்கள் நன்கு உணவினை எடுத்துக்கொள்வார்கள். மேலும், எடை குறையமாட்டார்கள். ஆனால், கர்ப்ப கால மிகை வாந்தி நோயினால் அளவுக்கதிமான வாந்தி இருந்துகொண்டே இருக்கும்.

இது, முதல் பிரசவத்திற்குத்தான் அதிகபட்சமான தாய்மார்களிடையே காணப்படும். இதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இந்த கர்ப்ப கால மிகை வாந்தி நோயில், வாந்தி வரும் உணர்வும் வாந்தியும் உணவைக் கண்டால் ஒரு ருசியற்ற நிலையும் இருப்பதோடு அது சிறிது சிறிதாக அதிகரித்து அதனால் ஏற்படும் பட்டினியால் தாயின் உடல் நலத்தையே பாதித்துவிடும்.

இதனால் அத்தாய் உடல் எடையை இழப்பதோடு தோலெல்லாம் சுருங்கி, அவர்கள் செய்யக்கூடிய சாதாரண வீட்டு வேலையைக் கூடசெய்ய முடியாமல் படுக்கையில் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

நோய் முற்றிய நிலையில் அத்தாய் மிகவும் மெலிந்து? கண்களெல்லாம் குழிவிழுந்து, தோல் உலர்ந்து, கண்களெல்லாம் மஞ்சள் பூத்து, நான்கு உலர்ந்து, உதடுகள் வெடித்து இருக்கும். வயிற்றில் மேல் பகுதி வலிக்கும்.

காபி நிறத்தில் வாந்தி வரலாம். பின்னர், நோயாளிக்குச் சிறுநீர் போவதும் குறைந்து மயக்க நிலைக்கு வந்து விடுவார்கள்.

நாடித்துடிப்பு வேகமாகவும் மெல்லியதாகவும் இருப்பதோடு இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

உடல் வெப்பம் குறைந்து முழுமையான மயக்க நிலையினை நோயாளிகள் அடைந்து இறந்துவிடும் வாய்ப்புகள்கூட உண்டு.

ஆனால், மருத்துவம் முன்னேற்றமடைந்த இன்றைய காலகட்டத்தில் இதனால் நோயாளிகளின் இறப்பு என்பது நிகழக்கூடியது அல்ல.

கர்ப்ப கால மிகை வாந்தி நோய்க்குச் சிகிச்சை

இந்நோய்க்கு, சாதாரண உணவு மாற்றங்களும், நம்பிக்கை அளித்தலுமே போதுமானதாகும்.

ஆரம்பக் கட்ட கர்ப்பத்தில் வாந்தி வருவது சாதாரண நிகழ்ச்சியே என்பதை எடுத்துச் சொலி, உணவு விஷயத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும்.

நீண்ட இடைவெளிய்ல் அதிக அளவு உணவு உட்கொள்வதை விடுத்து சிறிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக உணவினைச் சாப்பிடுவது நல்லது.

அதோடு மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைச் சாப்பிட்டாலேயே இந்நோய் குணமாகிவிடும்.

கடுமையான நோயுடைய தாய்மார்களுக்குச் சிரை (இரத்தக்குழாய்) வழியாக குளுகோஸ் கொடுக்க வேண்டியதாயிருக்கும்.

Related posts

நீங்க வீட்ல மூத்தவரா? இளையவரா? சொல்லுங்க..

nathan

காலத்திற்கு முந்தி பெண்கள் பருவமடைவதால் ஏற்படும் பாதகங்கள்

nathan

பெண்களின் குழந்தையின்மை பிரச்சனைக்கு காரணமான 3 முக்கிய பிரச்சனைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! பீர்க்கங்காய் எதற்கு உதவுகிறது என தெரியுமா?

nathan

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

nathan

பெண்கள் நாப்கின் இன்றி தங்களது மாதவிடாய்க் காலத்தைக் கடக்க வேண்டி உள்ளது

nathan

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வழிகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு அவசியம் – தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க வீட்டில் இதில் ஒரு பொருள் இருந்தாலும் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பணக்கஷ்டம் போகவே போகாதாம்…!

nathan