22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
​பொதுவானவை

பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
வண்டியை ஓட்டும்போது ஆர்.சி.புத்தகம், இன்ஸ்சூரன்ஸ் உங்கள் அடையாள அட்டை ஆகியவற்றின் பிரதிகள் கையில் இருக்க வேண்டும்.* வண்டி ஓட்டுவது மறக்காமலிருக்க எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெல்லாம் வண்டியை ஓட்டி பார்ப்பதும் அடிக்கடி டூவீலர் அல்லது கார் ஓட்டிச்செல்வதும் அவசியம்.* டூ-வீலராக இருந்தால் ஹெல்மெட்டும், காராக இருந்தால் சீட்பெல்ட்டும் அணிவது அவசியம்.* புதிதாக ஓர் இடத்துக்கு வண்டியை ஓட்டிச் செல்வதானால் பாதுகாப்பான வழியைத் தெரிந்து செல்வது நல்லது.

* வண்டியை எடுப்பதற்கு முன்பு எரிபொருள் இருக்கிறதா, டயர் நல்ல நிலையில் இருக்கிறதா, பிரேக் பிடிக்கிறதா என சரிபார்ப்பது மிகவும் அவசியம்.

* தனியே வாகனம் ஓட்டிச்செல்லும்போது கண்டிப்பாக செல்போனை எடுத்துச் செல்லவும். அது சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறதா என சரிபார்க்கவும்.

* அறிமுகமில்லாத யாருக்கும் லிஃப்ட் தரவேண்டாம்.

* வாகனம் பழுதனால் அந்த இடத்துக்கே வந்து சரி செய்துகொடுக்கும் சர்வீஸ் சென்டர் அல்லது மெக்கானிக்கின் செல் நம்பர்களை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

* வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உதாரணத்துக்கு வழி கேட்பவர்கள், சிக்னலில் பொருள்கள் விற்பவர்கள்.

* உங்கள் காரில் தானாகவே கதவு பூட்டிக் கொள்ளும் வசதி இருப்பினும் நீங்களும் ஒருமுறை சரிபார்க்கவும்.

* வண்டி ஓட்டும்போது செல்ஃபோனில் பேசுவதை கட்டாயம் தவிர்க்கவும். எத்தனை அவசரமான அழைப்பாக இருந்தாலும் பாதுகாப்பான ஓர் இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டுப் பேசுவதே நல்லது.

* வண்டியை பார்க் செய்யும் போது எக்காரணம் கொண்டும் செல்ஃபோனில் பேசுவதைத் தவிருங்கள். வண்டியைப் பூட்டி, சாவி உங்கள் கைகளில் இருப்பதை உறுதி செய்த பிறகு தான் அந்த இடத்தைவிட்டு நகர வேண்டும்.

Related posts

தவா பன்னீர் மசாலா

nathan

சுவையான காஞ்சிபுரம் இட்லி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

nathan

உடலுக்கு வலிமை தரும் வரகு கஞ்சி

nathan

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

nathan

சீஸ் பை

nathan

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

nathan

சுவையான சாம்பார் பொடி செய்முறை

nathan

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்

nathan