குழந்தையை ஒரே இடத்தில் படுக்க வைப்பதனால், குழந்தையின் முதுகு பகுதி அதிக சூடாவதற்கு வாய்ப்பு இருப்பதல், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தையை இடம் மாற்றி படுக்க வைக்க வேண்டும்.
வெயில் அதிகம் என்பதால், குழந்தைகளை வெளியில் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும், அவ்வாறு தவிர்க்க முடியாத சூலலில், வெளிர் நிற ஆடை அணிந்து வெளியில் கொண்டு செல்ல வேண்டும். அதிலும் பருத்தி ஆடையாக இருந்தால் மிகச்சிறந்தது.
குழந்தையின் முகத்திற்கு நேராக காற்றுப்படும் படி வைக்க கூடாது, இதனால் குழந்தைக்கு மூச்சு திணரல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாய் பாலே போதுமானது, தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி காய்ச்சி ஆற வைத்த நீரை கொடுக்கலாம்.
ஆறு மாதங்களான குழந்தைகளுக்கு பூசணிக்காய், பரங்கிக்காய் போன்ற நீர்ச் சத்துள்ள காய்களை வேக வைத்து மசித்து கொடுக்க வேண்டும்.
உடல் சூடு அதிகரிக்காமல் இருக்க, இரண்டு தினங்களுக்கு ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குழந்தையை தலைக்கு குளிக்க வைக்க வேண்டும்.
தலை முடி அதிகமாக இருந்தால் வேர்வையினால் சளிப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளின் முடியை அவ்வப்போது குறைப்பது நல்லது.
வெயிலின் தாக்கத்தை குறைப்பதாக எண்ணி குழந்தையை எப்பொழுதும் ஏ.சியிலேயே வைத்திருக்கக் கூடாது.
குழந்தை இருக்கும் இடத்தில் வெப்பனிலை 27 டிகிரியாக இருப்பது சிறந்தது.
கோடை விடுமுறை என்பதால் சிறுவர்களை வெளியில் விளையாட விடாமல். கேரம் போன்ற விட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளுக்கு, குழந்தைகளை பழக்க வேண்டும்.
கலர் குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், பதநீர், சிறிது உப்பு கலந்த மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி கொடுப்பதனால், சிறுவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைவதை தவிர்க்க முடியும்.
உடல் வெப்பம் அதிகமாவதல், வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் அதிகம் அந்த நேரங்களில், சப்போட்ட பழம் மற்றும் ஒரு டம்ளர் நீரில் உப்பு,சர்க்கரை கலந்து அடிக்கடி கொடுக்க வேண்டும்.
வெயில் காலங்களில் சிறுவர்கள் சரும வறட்சி, சீறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும், எனவே ஒரு நாளைக்கு 1 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த கொடுக்க வேண்டும்.
கோடை காலங்களில் கோழி இறைச்சி, சிப்ஸ், எண்ணெயில் பொறித்த உணவுகள், காரமான உணவு, சப்பாத்தி, பிஸ்கட் போன்ற மாவு பொருட்களை சிறுவர்களுக்கு கொடுக்க கூடாது.
திராட்சை, தர்பூசணி, கொய்யாப்பழம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட கொடுக்க வேண்டும்.
சுத்தமாக வைத்துக்கொண்டாலே பாக்டீரியாவால் உண்டாகும் வேர்குரு பிரச்னை இருக்காது, அதனால் வேர்குரு பவுடர் போட தேவையில்லை.
அவ்வாறு வேர்குரு பாதிப்பு ஏற்பட்டால், சந்தனம், வெப்பிலை போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.