கோடைகாலம் துவங்கி விட்டாலே மக்களுக்கு உடல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் நமது உடலில் நீர் வற்றி, வறட்சி ஏற்படுவது தான். வெயில் காலங்களில் அதிகமான தாகம் எடுப்பதை தவிர்க்கவும், நமது உடலில் வறட்சி ஏற்படாமலும் தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதுமானது.
இளநீர்
தண்ணீர் என்பது நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. தண்ணீருக்கு அடுத்ததாக தாகத்தை தணிக்க உதவுவது, இளநீர் தான். இளநீர் குடிப்பதால், நமது உடலில் நீர்சத்து வெற்றி போகாமல் இருப்பதற்கும், உடல் வெப்பமடைவதை தடுக்கவும் உதவுகிறது.
திராட்சை
கோடை காலத்தில் நாம் அதிகமாக கருப்பு திராட்சை பலத்தை சாப்ப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதால், நாக்கு வறட்சி அடைவது தடுக்கப்படுகிறது. மேலும், இது உடல் வெப்பம் அடைவதை தடுத்து, வறட்டு இருமல் ஏற்படாமலும் தடுக்கிறது.
வெள்ளரிக்காய்
கோடைகாலங்களில் சாப்பிடுவதற்கு மிகச் சிறந்த காயாக வெள்ளரிக்காய் உள்ளது. இதில் நீர்சத்து அதிகமாக உள்ளது இக்காலங்களில் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பமடைவது தடுக்கப்பட்டு, குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்கக் கூடிய பழவகைகளில் ஒன்று. இப்பழத்தை வெயில் காலங்களில் நாம் அதிகமாக சாப்பிடுவதால், உடல் வறட்சி அடைவதையும், அதிகமாக தாகம் எடுப்பதையும் தடுக்கிறது.
மாம்பழம்
மாம்பழம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பழம் தான். கோடைகாலங்களில் நாம் அதிகமாக மாம்பழங்களை சாப்பிட்டு வந்தால், அடிக்கடி தாக எடுப்பதை தடுத்து, உடல் வெப்பத்தை குறைக்கவும் இது உதவுகிறது.