25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
katralai1
ஆரோக்கியம் குறிப்புகள்

வேனல் கட்டி வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வேனல் கட்டி கோடை காலத்தில் ஏற்படும் ஓர் உபாதை ஆகும். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன. கடும் வெப்பத்தால் அவதியுறுவோருக்கு வேனல் கட்டிகளால் கூடுதல் அவஸ்தைகள் உண்டாகும்.

எனவே, வேனல் கட்டி வராமல் தடுக்கவும், வந்துவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

katralai1

வேனல் கட்டி வராமல் தடுக்க:

* வேனல் கட்டி மறைய மற்றும் ஏற்படாமல் இருக்க முதலில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கோடை காலத்தில் மட்டுமாவது இந்தப் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோடை காலங்களில் தோன்றும் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

* வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் வேனல் கட்டிகள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு நிவாரணம்:

* வேனல் கட்டி ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும்.

அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

* கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

* மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து தப்பிக்கலாம்.

* சந்தனத்தை உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.

* சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி மீது தடவ வேண்டும்.

இவ்வாறு செய்தால் வேனல் கட்டி மறையும்.

* கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில போட்டால் வேனல் கட்டி மறையும்.

* மஞ்சள் தூள் மற்றும் அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவினைப் போல் கலந்து கொண்டு அதனை கொதிக்க வைத்து களி பதத்திற்கு கிண்டி அதை வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் போட்டால் வேனல் கட்டி பழுத்து உடையும்.

* வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் பத்து போட்டு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.

* சிறிதளவு சுண்ணாம்புடன் சிறிது தேன் விட்டு குழைக்க வேண்டும். தேன் கிடைக்கா விட்டால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு குழைக்கலாம்.

அவ்வாறு குழைக்கும்போது அது சூடு பறக்க ஒரு கலவையாக வரும்.

அதை வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டி குணமாகும்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…பெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்!

nathan

திருமண கனவு அடிக்கடி வருகிறதா?

nathan

வாஸ்து படி தவறு? தப்பித்தவறி கூட இந்த செடிகளை வளர்த்து விடாதீர்கள்!

nathan

உங்கள் பெயரின் முதல் எழுத்தை சொல்லுங்க ! புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க…

nathan

சூப்பர் டிப்ஸ்! தலைவலி, வாந்தி பிரச்சனைகளுக்கு மருந்தாகும் ஏலக்காய் எப்படி பயன்படுத்தலாம்.?

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை வெளியேற்றுவதற்கான 10 முக்கியமான காரணங்கள்!!!

nathan

தேங்காய் உடைப்பதை வைத்து சகுணம் பார்ப்பது எப்படி?

nathan

உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!

nathan

சுவையான சேமியா தயிர் சாதம் செய்வது எப்படி தெரியுமா?..

nathan