29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
child
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள்!..ஏன் தெரியுமா?

குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

குழந்தைகளை வெறும் காலுடன் விளையாட விடுங்க

ஆரோக்கிய அச்சுறுத்தல் காரணமாக வெறும் காலோடு குழந்தைகளை விளையாட அனுமதிப்பதே இல்லை. காரணம் கிருமித் தொற்றால் குழந்தைக்கு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயம்.

ஆனால், குழந்தைகளை வெறும் காலோடு நடக்க விடுங்கள். அதுவும் மண்தரையில் நன்றாக ஓடி, ஆடி விளையாட விடுங்கள் அது அவர்களின் மூளைத்திறனை அதிகரிக்கும் என்கிறார்கள் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

child

வெறும் காலோடு நடப்பது, ஏறுவது, குதிப்பது, ஓடுவது போன்ற செயல்களை செய்யும்போது குழந்தைகளுடைய கால்களின் தசைகள் மற்றும் தசைநார்கள் வளர்ச்சியடைந்து, காலின் வலிமையும் அதிகரிக்கிறது.

விளையாடும் இடத்திற்கேற்ற விழிப்புணர்வை அதிகரிக்கிறது. பாத வளைவின் சமநிலைக்கு உதவுகிறது’ என்கிறார் நரம்பியல் மருத்துவரான ஆலியென் பெர்தோஸ்.

அதுமட்டுமல்ல, ஸ்பெயினின் மாட்ரிட்ஸில் உள்ள கம்ப்யூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தில் Preventive Podiatry, Barefoot babies result in Smarter Children என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட ஆராய்ச்சி.

வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் பாதுகாப்பு உணர்வைப் பெறுவதால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அவர்களுடைய மோட்டார் செல்கள் மிக வேகமாக முதிர்ச்சி அடைவதோடு, அவர்களின் காட்சி மற்றும் செய்கைகளில் ஒருங்கிணைப்பு கிடைக்கிறது.

சிக்கலான சூழலிலும் சிந்தனை வடிவங்களை மேம்படுத்தும் ஆற்றலும், குறிப்பாக நினைவாற்றலும் குழந்தைகளிடத்தில் வளர்கிறது என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

‘வாரத்திற்கு மூன்று நாட்கள் இயற்கை சூழ்ந்த பூங்காக்களிலோ, மைதானங்களிலோ வெறும் காலுடன் விளையாடும் குழந்தைகள் வெவ்வேறு பரப்புகளின் தன்மையை அறிவதன் மூலம், வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவலை அறிய முடிகிறது.

ஒரு விஷயத்தைப் பற்றிய பல்வேறு அணுகுமுறையை கற்றுக் கொள்கிறார்கள்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Related posts

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

sangika

தெரிந்துகொள்வோமா? பற்களை பிரஷ் செய்வதில் பலரும் செய்யும் முக்கியமான தவறுகள் என்னென்ன?

nathan

தெரிஞ்சிக்கங்க…பாத மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

nathan

கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

சூப்பர் டிப்ஸ்… தோசைக்கல்லில் தோசை ஒட்டிக்கொண்டு புண்டு புண்டு போகிறதா?

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

தெரிஞ்சிக்கங்க…பெயரின் முதல் எழுத்து B -ல் ஆரம்பிக்கிறவர்கள் எப்படி இருப்பார்கள்?

nathan

பற்களில் காரை படிந்துள்ளதா..? இனி கவலை எதற்கு.

nathan

சூயிங் கம் மெல்லுபவரா நீங்கள்?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan