31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையா? பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்…..

பெண்களுக்கு புருவம் வில் போல் அமைந்து இருந்தால் தான் அழகு. சுமாராக காணப்படும் பெண்கள் கூட புருவம் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையானால் அது கண்களில் அழகையும் கெடுத்து விடும்.

புருவங்கள் சிலருக்கு என்ன செய்தாலும் வளராது. சரி புருவம் போதிய வளர்ச்சி பெறாமல் இருந்தால் என்ன செய்யலாம். பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.

புருவமே இல்லாதவர்களுக்கு, சிறு வயதிலிருந்தே நல்ல தரமான மையை புருவத்தில் வைத்து விட்டு வந்தால் புருவம் அதே வடிவத்தில் அழகாக வளரும். ஐ ப்ரோ பென்சிலால் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய்யால் தொட்டு புருவத்தில் வரைந்து கொண்டு தூங்கினால் புருவம் அடர்த்தியாக வளரும்.

விளக்கெண்ணெய்:

தினமும் தூங்குவதுற்கு முன்பு புருவங்களில் விளக்கெண்ணெய் தேய்துவந்தால் இரண்டு மாதங்களில் புருவம் அடர்த்தியாக மாறுவதைக் காணலாம்.

தேங்காய் எண்ணெய்:

ஒரு பாத்திரத்தில் சிறிது அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் புருவத்தில் மசாஜ் செய்து வர பலன் தெரியும்.

வெங்காயச் சாறு:

வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்து தினமும் படுப்பதற்கு முன்பு தடவி வந்தால், புருவத்தில் முடி வளர்வதை விரைவில் நம்மால் காணமுடியும்.

கற்றாழை:

கற்றாழை சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தெய்து வருத்தல், அங்கு ஏற்பட்டுள்ள தொற்று நீங்கி முடி வளர ஆரம்பித்துவிடும்.

சீரம்:

புருவ சீரம் கடைகளில் கிடைக்கும் அதனை வாங்கி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தை கழுவிய பின், சீரத்தை ஒரு பிரஷினால் புருவத்தில் தடவ வேண்டும். மறு நாள் காலையில் கழுவுங்கள். இப்படி செய்வதால் புருவ முடிகள் தூண்டப்பட்டு, முடி வளர ஆரம்பிக்கும்.

Related posts

முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்

nathan

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து பாருங்க

nathan

அழகுக்கும் ஆரோக்கியத்துக்குமான சீக்ரெட்..

nathan

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

கருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்…

nathan

உங்க முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகமாக உள்ளதா? அதை மறைக்க சில டிப்ஸ்…

nathan

பிக்பாஸ் அல்டிமேட்.. முதல் நாளிலேயே பாலாஜியை நாமினேட் செய்த சினேகன்!

nathan

தன் கண்ணையே பிடுங்கி எறிந்த முதியவர் -அதிர்ச்சி சம்பவம்

nathan