தீபிகா படுகோனே பாலிவுட்டில் தற்போதைய முன்னணி நடிகைகளில் முதலில் இருக்கக் கூடியவர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதற்கு அவருடைய நடிப்புத் திறமை மட்டும் அல்ல, அவருடைய சொக்க வைக்கும் அழகும் தான் காரணம்.
அப்படி தன்னை எல்லோரையும் கொள்ளையடிக்கிற அழகாக எப்படி அவர் பராமரித்துக் கொள்கிறார் என்பது பற்றி தான் நாம் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம். தன்னுடைய அழகு ரகசியம் பற்றி அவரே என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.
சருமம் மற்றும் உடல்
ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டுமென்றால் அதற்கு நிச்சயம் கொஞ்சம் கிளன்சிங் பயன்படுத்த வேண்டும்.
அதற்காக நான் மென்மையான கிளன்சிங் சோப்பை பயன்படுத்துகிறேன். சருமத்துக்காக நான் பயன்படுத்தும் எல்லா பொருள்களுமே மிக மிக மென்மையாவை (மைல்டு) தான்.
பேஷியல்
ரெகுலராக நீங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ஃபேஷியல் செய்வதை விடவும் தொடர்ந்து அடிக்கடி சருமத்தை சுத்தம் செய்தாலே போதுமானது.
ஆயில் மசாஜ்
வழக்கமாக வாரத்துக்கு இரண்டு முறையாவது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் கொண்டு பாடி மசாஜ் செய்து கொள்வேன். அதற்காக எப்படியாவது நேரம் ஒதுக்கிவிடுகிறேன்.
தலைமுடிக்காக
தலைமுடியைப் பொருத்தவரையில் மிகவும் மரபான விஷயங்களை மட்டுமே பின்பற்றுகிறேன். வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் கொண்டு குறைந்தது வாரத்துக்கு ஒருமுறையாவது தலைக்கு நல்ல ஃபுல் மசாஜ் செய்துவிடுவது கட்டாயம்.
இவருடைய சிறு வயது முதல் தலைக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
கண்கள்
தீபிகாவுக்கு கண்களையும் புருவத்தையும் பளிச்சென பிரைட்டாக வைத்திருக்க மிகப் பிடிக்கும். பிளாக் கலர் ஐ லைனரும் பிரௌன் கலர் கலர் ஐ ஷேடோவும் இவருடைய கண்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்.
அப்படியே கொஞ்சமா மஸ்காரா. அதேபோல் இவருக்கு திக்கான ஐ புரோஸ் தான் பிடிக்குமாம்.
உதடு
போல்டான ரெட் கலர் லிப்ஸ்டிக் தான் தீபிகாவோட ஹாட் பேவரட். ஆனால் சில சமயங்களில் தான் அணியும் ஆடைக்கு ஏற்ப பிங்க், பீச்சி பிரௌன் அல்லது நியூட ஷேடுகளும் பயன்படுத்துவாராம்.
சூட்டிங் அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகள் இல்லாமல் இருக்கும் சமயங்களில் உதடுகளுக்கு வெறும் மாய்ச்சரைஸர் மற்றும் லிப் பாம் மட்டும் அப்ளை செய்து கொள்வாராம்.
சன் ஸ்கிரீன்
சன் ஸ்கிரீன் தான் தீபிகாவுடைய பெஸ்ட் ஃபிரண்டாம். நிறைய பேர் சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி புரியாமல் இருக்கிறார்கள்.
நம்முடைய கைகளிலே எடுத்துச் செல்லும் பொருள்களைத் தான் நாம் அதிகமாகப் பயன்படுத்துவோம்.
அதனால் எப்போதுமே கையில் சன் ஸ்கிரீன் லோஷனை கையோடு வைத்திருப்பேன். அதிலும் வெளியில் பயணங்கள் மேற்கொள்ளும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பாட்டில்கள் கையில் ஸ்டாக் வைத்திருப்பாராம்.