23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
9662be091d205c381
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா இளம் பெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் இவைதானாம்

இன்றைய கால கட்டத்தில் இளம்பெண்கள் பலரும் ஊட்ட சத்துக்கள் குறைபட்டால் அவதிபடுகின்றனர். இதனால் அவர்கள் மிகவும் எளிதில் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அதில் இருந்து மீள முடியாமல் போகும் அபாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

இதற்கெல்லாம் முக்கியகாரணம் என்னவென்றால் போதிய உணவுகள் உட்கொள்ளாமையும் , சரியான நேரங்களில் உணவுகளை எடுத்து கொள்ளாமல் நேரம் தாழ்த்தி உணவுகளை எடுத்து கொள்வதும் ஒரு முக்கிய காரணமாகும்.மேலும் அவர்கள்உண்ணும் உணவுகளில் ஊட்ட சத்துக்கள் குறைபாடுகள் இருப்பதும் ஒரு காரணமாகும்.

எனவே இளம்பெண்களை ஊட்ட சத்து எனும் குறைபாடுகளில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதனை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

உளுந்து :

பெண்கள் நாள் முழுவதும் அலுவலகத்தில் உட்காந்து கொண்டே வேலைகளை செய்வதால் அவர்கள் விரைவில் இடுப்புவலி எனும் நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். உளுந்து இடுப்பில் உள்ள எலும்புகளை வலுவடைய செய்யும். மேலும் வாரம் ஒரு முறை உளுந்தை கலி செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள எலும்புகள் வலுவடையும். மேலும் மனஅழுத்தம் நீங்கும். உடல் சூடுகள் தணியும்.

இவ்வாறு உளுந்தை பயன்படுத்தும் போது தூக்கமின்மை பிரச்சனையும் தீரும்.

முட்டை :

முட்டையில் உள்ள புரத சத்து அனைத்து வயதினருக்கும் மிகவும் நல்லது.இது உடலுக்கு புரத சத்துக்களை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பால் :

பாலில் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இது இளம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இது அவர்களின் எலும்புகளுக்கு மிகவும் நல்லது.

பனை வெல்லம்:

பனை வெல்லத்தில் பல ஊட்ட சத்துக்கள் நிறைந்து காண படுகிறது.குறிப்பாக பனைவெல்லத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி மற்றும் இருப்பு சத்து முதலிய பல சத்துக்கள் இதில் காணப்படுகிறது.

எள்ளு :

எள்ளு நமது உடலுக்கு அதிக சத்துக்களை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்ப்பதில் எள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது.

எள்ளில் அதிக அளவு எண்ணெய் சத்துக்கள் நிரம்பி காணப்படுவதால் இது நமது உடலுக்கு மிகவும் நல்லது.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை தீர்க்க தினமும் ஒரு எள்ளுருண்டையை சாப்பிட்டு வந்தாலே போதும்.அந்த பிரச்சனை நாளடைவில் குணமாகும்.

கீரைகள்:

கீரைகள் நமது உடலுக்கு பல அறிய ஊட்ட சத்துக்களை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் நமது உணவில் கீரைகளை நாம் தவறாமல் எடுத்து வந்தாலே போதும்.அது நமது உடலுக்கும் கண்பார்வைகளுக்கும் மிகவும் நல்லது.

காய்கறிகள் :

தினமும் கேரட் மற்றும் தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. இவ்வாறு நாம் காய்கறி சாலட்டாககவும் காய்கறிகளை நமது உணவில் எடுத்து வந்தால் அது நமது உடலுக்கு மிகவும் நல்லது.மேலும் தினம் ஒரு காய்கறிகளை நமது உணவில் சேர்த்து கொள்வது மிகவும் சிறந்தது.

நல்லெண்ணய் :

நல்லெண்ணெய்யை நாம் உணவில் சேர்த்து வருவதாலும் இது நமது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. நல்லெண்ணெய் உடல்சூட்டை தணிப்பதில் சிறந்தது.9662be091d205c381

Related posts

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

nathan

சுவையான பச்சை பட்டாணி தேங்காய் சாதம்

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு பொரியல்

nathan

பசியில இருக்கும்போது நீங்க தெரியாம கூட ‘இந்த’ விஷயங்கள செஞ்சிடாதீங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த 4 இயற்கை உணவு பொருட்கள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

உணவு நல்லது வேண்டும்!

nathan

வெயில் காலத்துல நீங்க தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான கேரட் பச்சை பட்டாணி சாலட்

nathan