முடி கொட்டும் பிரச்சினை தான் பலரையும் இன்று வாட்டி எடுக்கிறது. முடி உதிர்ந்தால் பல்வேறு கற்பனைகள் நமக்குள் வந்து விடுகின்றன. கொஞ்சம் முடி கொட்டினால் சிறிய அளவில் பிரச்சினை இருப்பதாகவும், அதிக முடி கொட்டினால் பெரிய அளவில் பிரச்சினை இருப்பதாகவும் கருதுகின்றனர். முடி கொட்டினால் மட்டும் பிரச்சினையாக பார்ப்பதில்லை.
மாறாக முடி ஒருசில இடங்களில் வளர்ந்தால் கூட அதையும் பிரச்சினையாகவே பார்க்கின்றனர். ஆண்களை காட்டிலும் பெண்களின் உடலில் அதிக அளவில் முடி வளர்ந்தால் அதனால் பல பாதிப்புகள் உண்டாகும் என ஆய்வுகள் சொல்கின்றன. பெண்களின் உடலில் வெவ்வேறு இடங்களில் வளர கூடிய முடிகளுக்கு பலவித அர்த்தங்கள் உள்ளன. இதை பற்றி முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
முடிகள்
பெண்களின் உடலில் தலை பகுதியில் தான் பெரும்பாலும் அதிக முடிகள் வளர்ந்திருக்கும். பெண்களின் மற்ற உடல் பாகங்களில் ஒரு சிலருக்கே அதிக அளவு முடி வளர கூடும்.
கை, கால், அந்தரங்க உறுப்பு, முதுகு, முகம் போன்ற இடங்களில் பெண்களுக்கு முடி வளர்ந்தால் அவை அனைத்திற்கும் பல அர்த்தங்கள் உண்டு.

பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
வயிற்று பகுதி
பெண்களின் உடலில் வயிற்று பகுதியில் முடி அதிக அளவில் வளர்ந்தால் அதற்கு மூல காரணமே ஹார்மோன்கள் தான். பெண்ணின் உடலில் ஆண்களின் ஹார்மோன் அதிக அளவில் உற்பத்தி ஆகினால் இது போன்று முடி வளர தொடங்கும்.

பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
மாதவிடாய்
பெண்களின் உடலில் இப்படி முடி வளர்வதற்கு முக்கிய காரணமே மாதவிடாய் சுழற்சியில் வேறுபாடு ஏற்படுவது தான். இதன் தாக்கம் தான் பெண்ணின் உடலில் முடிகளை வளர செய்கிறது.
இதன் தாக்கம் ஒருசில மாற்றங்களை உடலில் ஏற்படுத்தும். குறிப்பாக தூக்கமின்மை, பசியின்மை, மன நிலை மாறுபாடு ஆகியவை உண்டாகும்.

பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
உதடுக்கு மேலே
பெண்களுக்கு உதட்டுக்கு மேல் பகுதியில் முடி அதிக அளவில் வளர்ந்தால் அதற்கு காரணம் ஈஸ்ரோஜென் குறைபாடும், டெஸ்டோஸ்டெரோன் ஹோர்மோன் அதிக அளவில் உற்பத்தியாகுவதும் தான். இந்த மாற்றம் ஏற்படுவதற்கு காரணமும் ஹார்மோன்கள் தான்.
பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
கைகளில் முடி
கைகளில் முடி வளர்வதற்கு மூல காரணம் அட்ரினல் என்கிற சுரப்பி தான். இது சிறுநீரக பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடங்களில் முடி வளர்வதற்கு இந்த சுரப்பியில் சுரக்கின்ற ஹார்மோன்கள் தான் காரணம்.

பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
அளவுக்கு அதிகமாக முடிகள்
சில பெண்களுக்கு உடலில் எல்லா இடங்களிலும் அளவுக்கு அதிகமாக முடி வளர்ந்திருக்கும். இதற்கு காரணம் மரபணுக்கள் தான்.
இவர்களின் குடும்பத்தில் யாருக்காவது ஏற்கனவே இது போபண்ற முடிகள் உள்ளவர்கள் இருந்திருப்பார்கள். அவர்களின் மரபணு அப்படியே கடத்தி வருவதை இது குறிக்கிறது.

பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
அந்தர உறுப்புகளில்
பொதுவாகவே பெண்களுக்கு அந்தரங்க உறுப்பில் முடிகள் வளர்வது சாதாரமான ஒன்று தான். இது போல முடிகள் பெரும்பாலும் பெண்கள் பூப்படைந்தால் தான் வளரும். இந்த முடிகளினால் எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால், அவ்வப்போது ட்ரிம் செய்வது சிறந்தது.
பெண்களுக்கு இந்த இடத்தில் உள்ள முடிகள் பெண்களை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா?
சமநிலை மாறுபாடு
உடலின் செயல்திறனுக்கு மிக முக்கியமாக தேவைப்படுவதே ஹார்மோன்கள் தான். ஹார்மோன் உற்பத்தி சமநிலை இல்லாமல் இருந்தால் இது போன்ற பல்வேறு பாதிப்புகள் உண்டாகும்.
உயர் இரத்த அழுத்தம், உடலில் மேல் பகுதியில் மட்டும் பருமன் கூடுதல், தலைவலி, தசைகள் வலுவிழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட கூடும்.

source: boldsky.com