அழகு குறிப்புகள்

சர்க்கரை வள்ளி கிழங்கு உங்களுக்கு தெரியுமா எண்ணெய் வடியும் சருமத்திற்கு தீர்வு தரும்

முகத்தின் பிரச்னைகளை வீட்டிலேயே இயற்கை முறையில் எளிதாகக் குணப்படுத்தி விடலாம். அதுவும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து இதற்கு அருமையான தீர்வை தந்து விடலாம். முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இந்த கிழங்கு நல்ல தீர்வை தருகிறதாம்.வறட்சியை குறைக்க முகம் பார்க்க மிகவும் வறண்டு காணப்படுகிறதா? இதனை சரி செய்ய இந்த குறிப்பே போதும்.

தேவையான பொருட்கள்

  • யோகர்ட் 1 ஸ்பூன்
  • ஓட்ஸ் 1 ஸ்பூன்
  • சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி

sweetpotatoeசெய்முறை

முதலில் சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.
அடுத்து இவற்றுடன் ஓட்ஸ் மற்றும் யோகர்ட் சேர்த்து அரைத்து கொண்டு முகத்தில் பூசவும்.
20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

இவ்வாறு வாரத்துக்கு 2 முறை செய்து வந்தால் முக வறட்சி நீங்கி விடும்.

வெண்மையாக வைக்க முகத்தை வெண்மையாக மாற்ற சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து முகத்தில் நேரடியாக பூசவும். இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முகத்தின் கருமையை குறைத்து வெண்மையாக மாற்றி விடும் தன்மை கொண்டது. அத்துடன் முகத்தில் உள்ள அழுக்குகளையும் அகற்றி விடும். எண்ணெய் வடிதலுக்கு முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால் அவை பருக்களுக்கு வழி வகுக்கும்.இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி தர இதனை பயன்படுத்துங்கள்.

தேவையானவை

  • சர்க்கரை வள்ளி கிழங்கு பாதி
  • தேன் 1 ஸ்பூன்

செய்முறை

வள்ளி கிழங்குடன் தேன் கலந்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள அந்தோசைனின் முகத்தின் கருமையை நீக்குவதுடன் எண்ணெய் வடிதலையும் குறைக்கும்.

எப்போதும் கணினியை பயன்படுத்துவோர்க்கு கண்கள் வீங்கிய படி இருக்கும். இந்த பிரச்னையையும் சர்க்கரை வள்ளி கிழங்கை வைத்து தீர்க்கலாம்.

சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்து இரண்டு பங்காக அரிந்து கண்களின் மேல் வைத்து கொள்ளவும்.20 நிமிடம் கழித்து இதனை எடுத்து விடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வீக்கம் குறைந்து விடும். முகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வை சர்க்கரை வள்ளி கிழங்கு தருவதற்கு சில முக்கிய காரணிகள் உள்ளன.

அதில் உள்ள வைட்டமின் சி, டி, இரும்பு சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை தான் முதன்மையான காரணமாக உள்ளது. எனவே, இதனை சாப்பிட்டாலும் அப்படியே முகத்தில் பூசினாலும் நல்ல பலனை தரும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button