26.6 C
Chennai
Sunday, Dec 29, 2024
2 1551077671
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இந்த இலைய இப்படி சாப்பிட்டா இந்த கொடூரமான 5 நோயும் உங்கள எட்டியே பார்க்காதாம்

தாரா (கொலாசியா எஸ்குலென்டா) என்ற தாவரம் தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் இந்தியாவில் பரவலாக வளரும் ஒரு வெப்பமண்டல தாவரமாகும். இது தமிழில் சேப்பங்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் இலைகள் மற்றும் கிழங்கு உண்பதற்கு பயன்படுகிறது. மேலும் இதில் உடல் நலத்திற்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன.

இலைகளின் அமைப்பு

இதன் இலைகள் பார்ப்பதற்கு இதய வடிவில் அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும். இந்த இலைகளை சமைத்து சாப்பிடும் போது கீரை சுவையுடன் இருக்கும். ருசியான இந்த கீரையை நீங்கள் சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து அளவுகள்
100 கிராம் சேப்பங்கிழங்கு இலையில் 85.66 கிராம்- தண்ணீர் 42 கிலோ கிராம் – கலோரிகள் 4.98 கிராம் – புரோட்டீன் 0.74 கிராம் – லிப்பிட் 6.70 கிராம் – கார்போஹைட்ரேட் 3.7 கிராம் – நார்ச்சத்து 3.0 1 கிராம் – சர்க்கரை சத்து 107 மில்லி கிராம் – கால்சியம் 2.25 மில்லி கிராம் – இரும்புச் சத்து 45 மில்லி கிராம் – மக்னீசியம் 60 மில்லி கிராம் – பாஸ்பரஸ் 648 மில்லி கிராம் – பொட்டாசியம் 3 மில்லி கிராம் – சோடியம் 0.41 மில்லி கிராம் – ஜிங்க் 52.0 மில்லி கிராம் – விட்டமின் சி 0.209 மில்லி கிராம் – தயமின் 0.456 மில்லி கிராம் – ரிபோப்ளவின் 1.513 மில்லி கிராம் – நியசின் 0.146 மில்லி கிராம் – விட்டமின் பி6 126 மைக்ரோ கிராம் – போலேட் 4825 மைக்ரோ – விட்டமின் ஏ 2.02 மில்லி கிராம் – விட்டமின் ஈ 108.6 மைக்ரோ கிராம் – விட்டமின் கே

புற்றுநோயை தடுத்தல்
இந்த சேப்பங்கிழங்கு இலையில், விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பொருட்கள் உள்ளன. எனவே இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும் குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க இது உதவுகிறது.

கண் ஆரோக்கியம் இந்த இலைகளில் நிறைய விட்டமின் ஏ இருப்பதால் கண்களுக்கு நல்லது. நல்ல பார்வை, வயதாகுவதால் ஏற்படும் கண் புரை போன்றவற்றை சரியாக்குகிறது. நல்ல தெளிவான பார்வையை கொடுத்து கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல் இதிலுள்ள சபோனின், டேனின்ஸ், கார்போஹைட்ரேட் மற்றும் ப்ளோனாய்டுகள் போன்ற பொருட்கள் நமக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த இலைகளின் சாற்றைக் கொண்டு எலிகளில் ஆராய்ச்சி செய்த போது அதன் ஆண்டிஹைர்பெர்ட்டென்சியஸ் மற்றும் கடுமையான டையூரிக் தன்மை எலிகளின் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் பக்கவாதம், மூளையில் இரத்த குழாயை பாதிப்படையச் செய்தல், மூளைக்கு போகும் இரத்த ஓட்டத்தை தடுத்தல், இதய நோய்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த சேப்பங்கிழங்கு இலைகளை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் இதிலுள்ள விட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோயெதிர்ப்பு செல்களான டி செல்கள், போகோசைட் போன்றவை வேலை செய்ய விட்டமின் சி அவசியம். உங்கள் உடலில் விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நோயெதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும்.

டயாபெட்டீஸ் நோயை தடுத்தல் தற்போது டயாபெட்டீஸ் நோய் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு டயாபெட்டீஸ் நோய் எங்கும் பரவி கிடக்கிறது. இந்த இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனாலை டயாபெட்டீஸ் உள்ள எலிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்த போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்திருப்பது தெரிய வந்தது. டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்கா விட்டால் சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள் போன்ற ஏராளமான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது.

சீரண சக்திக்கு உதவுதல்
இந்த சேப்பங்கிழங்கு இலைகளில் உள்ள நார்ச்சத்துகள் சீரண பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது. எளிதில் உணவை சீரணிப்பதோடு, சத்துக்களை உறிஞ்சி கொள்ளவும் உதவுகிறது. குடலில் எச்சரியா கோலி, லாக்டோபேசில்ஸ் அசிட்டோபில்ஸ் போன்ற நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது.

அழற்சியை குறைத்தல்
இந்த இலைகளில் பினால்ஸ், டேனின்ஸ், ப்ளோனாய்டுகள், க்ளைக்கோசைடு, ஸ்டெரோல், ட்டைட்டர்பினாய்ட்ஸ் போன்ற அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. இது நாள்பட்ட அழற்சியை கூட போக்க வல்லது. அழற்சியை தோற்றுவிக்கும் ஹிஸ்டமைன், செரோடோனின் போன்றவற்றை ஆரம்பத்திலேயே குறைத்து விடுகிறது. இதனால் அழற்சி தீவிரமாகுவதை தடுக்கிறது.

நரம்பு மண்டலம் பாதுகாப்பு
இந்த சேப்பங்கிழங்கு இலைகளில் விட்டமின் பி6, தயமின், நியசின், ரிபோப்ளவின் போன்றவை நரம்பு மண்டல பாதுகாப்புக்கு உதவுகிறது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தை வலிமை அடைய செய்யவும் உதவுகிறது. இந்த இலைகளின் சாற்றிலிருந்து பெறப்படும் ஹைட்ரோஆல்காலிக் மத்திய நரம்பு மண்டல பாதிப்புக்கு உதவுகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனிமியாவை தடுத்தல் இரத்த சோகை அல்லது அனிமியா என்பது இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இந்த சேப்பங்கிழங்கு இலைகளில் நிறைய இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதில் விட்டமின் சி இருப்பதால் இரும்புச் சத்தை உறிஞ்சி கொள்வது எளிதாக அமைகிறது. இதனால் அனிமியா அல்லது இரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

சாப்பிட வேண்டிய முறை
முதலில் சேப்பங்கிழங்கு இலைகளை சுத்தமாக அலசிக் கொள்ள வேண்டும். பிறகு கொதிக்கின்ற நீரில் போடுங்கள். 10-15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும் இப்பொழுது தண்ணீரை வடிகட்டி விட்டு வேக வைத்த இலைகளை உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்.

பக்க விளைவுகள் இந்த இலைகளால் அரிப்பு, சிவந்து போதல், எரிச்சல் போன்றவை சருமத்தில் ஏற்படலாம். இந்த இலைகளில் உள்ள ஆக்ஸலேட் சிறுநீரக கற்களை உருவாக்கலாம். எனவே இதை பச்சையாக சாப்பிடாமல் வேக வைத்து சாப்பிடுங்கள்.

எப்பொழுது சாப்பிட வேண்டும் இதை மழைக்காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது. நன்மை தரும். வெயில் காலங்களில் அவ்வளவு பசுமையாக சேப்பங்கிழங்கு இருப்பதில்லை. இருந்தாலும் கூட வெயில் காலத்தில் சேப்பங்கிழங்கு கீரையைத் தவிர்ப்பது நல்லது.

2 1551077671Source :Boldsky

Related posts

இத படிங்க கர்ப்பிணிகளே பற்களை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்…

nathan

காலை உணவுக்கு நோ… உடல்பருமனுக்கு வெல்கம்!

nathan

சூப்பர் டிப்ஸ்… சமையலறை… சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க… வீட்டில் இருக்கும் நேரத்தில் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க சில யோசனைகள்!

nathan

அற்புதமான எளிய தீர்வு! உடலில் உள்ள கொழுப்பை வேகமாக கரைக்க உதவும் 7 வழிமுறைகள்!!!

nathan

சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! டிப்ஸ்..டிப்ஸ்.

nathan

உங்களுக்கு தெரியுமா பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வரும்…

nathan

nathan