23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
12 1551784699
ஆரோக்கியம் குறிப்புகள்

தினம் ஆவாரம்பூ 1 வீதம் ரெண்டு வாரம் சாப்பிடுங்க… இந்த எட்டு நோயும் உங்களுக்கு வரவே வராது

நம் வீட்டின் அருகிலேயே அற்புதமாக கிடைக்கும் மூலிகை தான் இந்த ஆவாரம் பூ. இது பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் இதன் பலன் பெரிது. இது பயிறு வகை குடும்பத்தை சார்ந்த தாவரமாகும். கேசியா என்ன பிரிவைச் சார்ந்தது. இதன் இலைகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆவாரம் தாவரம் இந்தியாவில் பரவலாக காணப்படும் தாவரமாகும். இது தற்போது பவுடர், லிக்யூட், டீ மற்றும் மாத்திரை வடிவில் கூட கிடைக்கின்றன.

அமெரிக்க மூலிகை பொருட்கள் சங்கம் (AHPA) படி, ஆவாரம் பழம் அதன் இலைகளை விட பெரும்பாலும் பயன்படுகிறது. அடிவயிற்று வலி மற்றும் வயிற்று போக்கு இருப்பவர்கள் இதன் இலைகளை சாப்பிடக் கூடாது.

மலச்சிக்கல்
இதன் இலைகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இதை நிரூபித்து உள்ளது. இதில் சென்னோசைடு, அன்ட்ரோகுவினோனின் போன்ற மருத்துவ பொருட்கள் உள்ளன. இது ஒரு மலமிளக்கி மாதிரி செயல்பட்டு மலத்தை இலகுவாக வெளியேற்றுகிறது. இந்த இலைகளை சாப்பிட்ட 6-12 மணி நேரத்தில் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.

உடல் எடை இழப்பு
மருத்துவ தாவர ஆய்வு படி இது ஒரு மலமிளக்கி மட்டுமில்லாமல் மெட்டா பாலிசத்தை தூண்டக் கூடியது. இந்த ஆவாரம் டீ குடித்து வந்தால் பசியை குறைத்து உடல் எடையை வெகுவாக குறைக்கிறது. இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் அதிக உடல் எடை இழப்பு ஏற்படலாம். எனவே சரியான அளவை பயன்படுத்தி வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

குடலை சுத்தப்படுத்துதல் இது ஒரு இயற்கை மலமிளக்கி என்பதால் குடலில் தங்கியுள்ள கசடுகளை சுத்தம் செய்கிறது. கோலனோஸ்கோபி போன்ற மருத்துவ சிகச்சையில் கூட குடலை சுத்தம் செய்ய இதை பயன்படுத்துகின்றனர். விளக்கெண்ணெய் உடன் சேர்த்து பயன்படுத்துவது கூடுதல் பலனளிக்கும்.

பாராஸிட்டிக் தொற்று இதன் ஆன்டி பாராஸிட்டிக் தன்மை குடலில் இருக்கும் புழுக்கள் மற்றும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. இந்த குடல் வாழ் புழுக்கள் குடலில் தங்கிக் கொண்டு உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி ஊட்டச்சத்து பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. எனவே குடலில் புழுக்கள் வளராமல் தடுக்க இதை பயன்படுத்தலாம்.

இரத்தக் கசிவு உடலில் ஏற்படும் இரத்தக் கசிவை போக்க இந்த மூலிகை உதவுகிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்சினையால் வரும் குடலிறக்கம், குடலில் இரத்தக் கசிவு போன்றவற்றிற்கு உதவுகிறது. இதன் சென்னோசைடு என்ற பொருள் மலவாய் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து மலம் கழித்தலை எளிதாக்குகிறது.

டைசெப்டிக் நோய் இந்த ஆவாரம் மூலிகை டைசெப்டிக் நோய்க்கு சிறந்தது. வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சமநிலையாக்கி சீரண த்தை மேம்படுத்துகிறது. இந்த மூலிகை மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலே போதும் சீரண பிரச்சினையை சரி செய்து விடலாம்.

கர்ப்ப கால பயன்கள் கர்ப்ப காலத்தில் இந்த மூலிகை யை எடுத்து வருவது சிறந்தது. குறுகிய காலம் பயன்படுத்தி வந்தால் போதுமானது. நீண்ட மாதங்கள் எடுத்துக் கொண்டால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்லீரல் பாதிப்பு, மலம் வெளியேறிக் கொண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தாய்ப்பாலில் சிறுதளவு இந்த மூலிகை கலந்து இருந்தால் பிரச்சனை இல்லை. அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

குடல் ஆரோக்கியம் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் குடலில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது. இதிலுள்ள பாராகோல் என்ற பொருள் இரைப்பையில் நச்சுகள் தேங்காமல் இருக்க உதவுகிறது.

எடுத்துக் கொள்ளும் அளவு உணவு கட்டுப்பாடு வாரியம் கருத்துப்படி குழந்தைகள் ஒரு நாளைக்கு 8.5 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஒரு நாளைக்கு 1 7. 2 மில்லி கிராம் அளவு எடுத்து கொள்ளலாம். வயதானவர்கள் 17 மில்லி கிராம் அளவு எடுத்து கொள்ளுங்கள் கர்ப்ப கால பெண்கள் 28 மில்லி கிராம் அளவு ஒரு நாளைக்கு எடுத்து கொள்ளுங்கள் 2 வாரத்திற்கு மேல் இதை எடுத்துக் கொள்ள வேண்டாம்

விளைவுகள் அதிகளவு ஆவாரம் மூலிகை எடுத்துக் கொள்ளும் போது கல்லீரல் பாதிப்பு, நரம்பு பாதிப்பு மற்றும் கோமா ஏற்படுகிறது. அல்சர், க்ரோன் நோய், குடல் பாதிப்பு, வயிற்று போக்கு, நீர்ச்சத்துயின்மை, இதய நோய்கள் உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்.

பக்க விளைவுகள் அதிகளவில் எடுத்துக் கொள்ளும் போது வயிற்று போக்கு, அடிவயிற்று வலி, வாயு பிடிப்பு, சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படும். அதிகளவு பயன்பாடு குளோபுலின் குறைவு, உடல் நலமின்மை, மலக்குடல் இரத்த போக்கு, நகங்களில் வீக்கம் போன்றவை ஏற்படும். இது ஒரு மலமிளக்கி என்பதால் பொட்டாசியம் பற்றாக்குறையை உண்டாக்கி எலக்ட்ரோலைட் சமநிலையை உடலில் உண்டாக்குகிறது. சென்னா டைகோக்ஸின், வார்ஃபரின், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற சில மருந்துகளுடன் தொடர்பு கொள்கிறது. சென்னா டைகோக்ஸின், வார்ஃபரின், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற சில மருந்துகளுடன் இது வினைபுரியக் கூடியது.

முடிவு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆவாரம் மூலிகையை அளவோடு சாப்பிட்டால் நன்மைகள் அதிகம். எனவே சரியான அளவில் பயன்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை பராமரியுங்கள். இது குறித்து உங்கள் மருத்துவரையும் நீங்கள் ஆலோசனை செய்து கொள்ளலாம்.

12 1551784699

Source : Boldsky

Related posts

காதில் நுழைந்த பூச்சியை வெளியில் எடுப்பது எப்படி?

nathan

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

nathan

தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்குவது சரியா? தவறா?

nathan

உங்களுக்கு தெரியுமா! அல்சர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள்!

nathan

குளித்து முடித்ததும் ஏன் ஒருவருக்கு வியர்க்கிறது தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

can i dye my hair while breastfeeding – தாய்ப்பால் கொடுக்கும் போது என் தலைமுடிக்கு சாயம் பூச முடியுமா?

nathan

கொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்!

nathan

தெரிஞ்சிக்கங்க…குழந்தைகள் ஏன் விளையாட வேண்டும்?

nathan