23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
3 1552041806
ஆரோக்கிய உணவு

7 நாள் எலுமிச்சை ஜூஸ் தோலோடு குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா? அப்ப இத படிங்க!

எலுமிச்சை ஜூஸ் தற்போது நிறைய எடுத்துக் கொள்ளும் பானமாக மாறிவிட்டது. சிலர் லயித்துக் குடிப்பார்கள். சிலர் அதில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் இருப்பதால் இதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தொடர்ந்து ஏழு நாட்கள் எலுமிச்சை குடித்து வந்தால் நம்முடைய உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் உண்டாகும் என்று என்பதைத் தெரிந்து குடிப்பது நல்லது.

எலுமிச்சை
எடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் இன்னொரு விஷயத்தையும் நாம் நேர்மையாக ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்பதால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு விடாது என்பது தான். அதனால் நீங்கள் நிச்சயம் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். அதை எவ்வளவு குடிக்க வேண்டும், எத்தனை நாள் குடிக்கலாம் போன்ற விவரங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

எலுமிச்சை சாறு
ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எலுமுிச்சை ஜூஸ் தயாரிக்கத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாதது தான். நமக்குத் தேவையான எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புதினா, தேன் மற்ற சில பழச்சாறுகள் கூட கலந்து கொள்ளலாம். சர்க்கரை வேண்டாமென்றால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது நல்லது.

ஊட்டச்சத்து நிபுணர்கள் முறை
எலுமிச்சை ஜூஸை நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தயார் செய்வோம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டால் அவர்குள் ஊட்டச்சத்து அளவுகளுக்கு ஏற்றபடி எலுமிச்சை ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை முதலில் பாருங்கள்.

வெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டுவிடுங்கள். நீங்கள் அந்த எலுமிச்சையை தோலோடு அப்படியே எடுத்து சாப்பிட வேண்டும் என்பதெல்லாம் தேவையில்லை.

பாலிபினைல்கள் எலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழுது தான் பாலிபினைல்கள் அதிக அளவில் கிடைக்கும்.

எத்தனை முறை? ஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த எலுமிச்சை நீரைக் குடிக்கலாம். கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம். இன்னும் இதுபற்றிய பல விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

புத்துணர்வு சுவாசம் நாம் யாருடனாவது பேசுகிற பொழுது, புதினா மௌத் பிரஷ்னரோ அல்லது சுவிங்கமோ வாயில் போட்டுக் கொள்வது உண்டு. ஏனென்றால் அது நம்முடைய வாயிலிருந்து கெட்ட துர்நாற்றத்தை உண்டாக்கக் கூடாது என்பதற்காக. நீங்கள் ந்னறாக கவனித்தால் தெரிந்திருக்கும் நிறைய மௌத் பிரஷ்னர்கள் எலுமிச்சை எக்ஸ்டாக்டு சேர்க்கப்பட்டு இருக்கும். அதற்கு பிரஷ்ஷான எலுமிச்சை நீரை குடித்தால் நம்முடைய சுவாசம் எவ்வளவு புத்துணர்வாக இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

சாப்பாட்டுக்குப் பின் சாப்பிட்டு முடித்ததும் கொஞசம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது நல்லது. குறிப்பாக, வெங்காயம், பூண்டு, சீஸ், மீன் ஆகியவற்றை சாப்பிட்ட பின் கட்டாயம் வாயில் ஒருவித மணம் வெளிப்படும். அதைப் போக்க எலுமிச்சை தான் சிறந்த வழி.

சலைவாய் உற்பத்தி சிலருக்கு உணவுப் பண்டங்களைப் பார்த்தாலோ சாப்பிட்டாலோ அல்லது சாதாரணமாகவே சலைவாய் உற்பத்தி நிறைய இருக்கும். சிலருக்கு சலைவாயே வராது. சலைவாய் நம்முடைய ஜீரண சக்தியைத் துரிதப்படும் அற்புத மகத்துவம். எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சலைவாய் உற்பத்தியை அது தூண்டும்.

பாக்டீரியா உற்பத்தி காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது நம்முடைய வாய் மிக வறட்சியாக இருக்கும். அந்த சமயங்களில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாகும். அதனால் தான் வெறும் வயிற்றில் வெதுதெவதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பது அவசியமாகிறது.

இளமையான சருமம் எலுமிச்சை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் மிகவும் இளமையுடன் இருப்பீர்கள். சருமம் புத்துணர்வு பெறும். சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையின் வழியாக வெளியேற்றி, இளமையாக வைத்திருக்கும் சருமச் சுருக்கங்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

அதிக வைட்டமின் சி வைட்டமின் சி சத்து உடலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒன்று. ஏனென்றால் இது செல் சிதைவைத் தடுக்கக் கூடியது. அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கொண்டது. அதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவி செய்கிறது. நார்ச்சத்தை உடலில் கொண்டு சேர்க்க உதவுவதே இந்த வைட்டமின் சி தான்.

வேகமாக எடை குறைய மிக வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸ் எலுமிச்சை தண்ணீர் தான். இதில் உள்ள பாலிபினைல் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. அதிக கொழுப்பு குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட டயட்களில் கூட உடல் எடையை வேகமாகக் குறைக்க எலுமிச்சை தான் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீரகக் கற்கள் சிறுநீரகக் கற்களால் ஆண்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது தான். ஆனால் தொடர்ந்து நீங்கள் எலுமிச்சை தண்ணீரைக் குடித்து வந்தீர்கள் என்றால் அது சிறுநீரகக் கற்கள் உண்டாகாமல் பாதுகாக்கும்.

சிறுநீர் தொற்று ஆண், பெண் இருவருக்குமே சிறுநீரகத் தொற்றுக்கள் வந்தால் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சூடு பிடிப்பது அதிகமாகும். ஆனுால் அடிக்கடி எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சூடு பிடிப்பது குறைந்து சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கவும் முடியும்.

3 1552041806

 

 

 

Related posts

ஏன் காலை 9 மணிக்கு முன் எப்போதுமே காபி குடிக்கக் கூடாது?

nathan

உங்களுக்கு தெரியுமா தயிர் சாப்பிடுவதால் உடல் பருமனை குறைக்க முடியும்!

nathan

சூப்பர் டிப்ஸ்! காய்கறிகள் வாடாமல் இருக்க இப்படி செய்யுங்கள்…!!

nathan

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

nathan

பீன்ஸின் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம் !!

nathan

மணத்தக்காளிக்காய்

nathan

உடலுக்கு குளுமை தரும் அரைக்கீரை

nathan

நாகலிங்க பூவில் இவ்வளவு சிறப்புக்கள் இருக்கா?நம்ப முடியலையே…

nathan

இந்தப் பழம் பல நோய்களில் இருந்து விடுதலை அளிக்கும்…..

sangika