ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு. கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும்.பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் நல்ல சத்தான உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்; அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!
ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம் உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக்கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றுக்குப் பதிலாக கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்கிறார்கள் மருத்துவர்கள்.