30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
hand wash
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

வெளியே செல்லும் முன் செய்யக்கூடிய எந்தெந்த செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று பார்க்கலாம் வாங்க!…

வாழ்க்கையில் வெற்றியும், அதிர்ஷ்டமும் அனைவரும் விரும்பும் ஒன்றாகும். ஆனால் அது பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. நாம் செய்யும் சின்ன சின்ன செயல்கள் கூட நமது அதிர்ஷ்டத்தை பாதிப்பதாக அமையும். நாம் வீட்டை வெளியேறும்போது செய்யும் சில செயல்கள் நாம் செல்ல காரியங்களை வெற்றிகரமானதாக மாற்றும் என்று கூறப்படுகிறது.

உண்மைதான் நாம் வீட்டை விட்டு வெளியேறும் போது செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் நமது மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிப்பதோடு, நமது நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

இதில் சில வாஸ்து சாஸ்திர உண்மைகளும் உள்ளது. கடின உழைப்பு மட்டுமின்றி இந்த சாதுர்ய செயல்களும் உங்கள் வேலைகளை வெற்றிகரமானதாக முடித்து வைக்கும்.

இந்த பதிவில் வெளியே செல்லும் முன் செய்யக்கூடிய எந்தெந்த செயல்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

hand wash

கை கழுவுதல்

வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன் கையை கழுவ வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் குளிர்ந்த நீர் மற்றும் கொதிக்க வைக்காத பால் கொண்டு கையை கழுவ வேண்டும். இது உங்கள் வேலையை வெற்றிகரமாக முடித்து கொடுக்கும்.

வெல்லம்

வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் கொஞ்சம் வெல்லம் மற்றும் தண்ணீரை எடுத்து கொள்ளவும். இது உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு உங்கள் ஆற்றலையும் அதிகரிக்கும்.

கிராம்பு

உங்கள் பர்சில் ஐந்து கிராம்புகளை வைத்துக்கொள்ளுங்கள். இது உங்களை சுற்றி ஒரு நறுமண வாசனைகளை எழுப்பும் மேலும் அது உங்களை நோக்கி வரும் எதிற்மறை ஆற்றல்களை விரட்டும்.

மிளகு

வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் சில கருப்பு மிளகை எடுத்து உங்கள் வீட்டு வாசலில் வைக்கவும். அதன் பின் திரும்பி பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறவும். உங்கள் வேலை நிச்சயம் நல்லபடியாக முடியும்.

கணபதி மந்திரம்

வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் பிள்ளையாரை வணங்குவது நல்லது. ஓம் கண் கணபத் நமஹ என்னும் மந்திரத்தை வீட்டை வெளியேறுவதற்கு முன் சொல்லிவிட்டு செல்லுங்கள்.

தேதி

புது வீட்டிற்கு செல்லும் போது உங்களுக்கு மிகவும் பிடித்த மற்றும் முக்கியமான தேதிகளில் மாறுவது நல்லது.

அது உங்கள் கல்யாண நாளாகவோ, உங்கள் பிறந்த நாளாகவோ அல்லது உங்கள் முதல் குழந்தையின் பிறந்த நாளிலோ செல்வது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

எண்கள்

புது வீட்டிற்கு செல்லும்போது 13 ஆம் தேதியில் செல்லாமல் இருப்பது நல்லது. அதேசமயம் உங்கள் வீட்டில் இருக்கும் மாடிப்படிகளின் எண்ணிக்கை இரட்டைப்படையில் இருக்க வேண்டுமே தவிர ஒற்றைப்படையில் இருக்கக்கூடாது.

விளக்கு

நீங்கள் புது வீட்டிற்குள் நுழைந்தவுடன் செய்யும் முதல் காரியம் விளக்கேற்றுவதாக இருக்க வேண்டும்.

வாஸ்துவின் படி இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டும்.

மணி அடித்தல்

உங்கள் வீட்டில் இனிய ஒலிகளை எழுப்பும் மணிகளை தொங்க விடுவது நல்லது. வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு இந்த மணியை அடிக்க வேண்டும்.

இந்த ஒலி உங்கள் வீட்டை சுற்றி ஒரு நேர்மறை சக்திகளை பரப்பும் என்று கூறப்படுகிறது.

பால் மற்றும் அரிசி

புது வீட்டிற்கு செல்லும் போது கொதிக்க வைத்த பால் மற்றும் அரிசியை கலந்து கடவுளுக்கு வைத்து வழிபடவும்.

இதில் மீதியை உறவினர்களுக்கு கொடுத்து விட வேண்டும். இந்த கலவையில் இனிப்பு குறைவாகவே இருக்க வேண்டும் .

துடைப்பம்

உங்கள் பழைய வீட்டில் இருந்த துடைப்பத்தை ஒருபோதும் உங்களின் புதிய வீட்டிற்கு எடுத்து செல்லாதீர்கள்.

இது உங்கள் பழைய வீட்டில் இருந்த எதிர்மறை சக்திகளை உங்களின் புதிய வீட்டிற்கும் அழைத்து வரும் செயலாகும். புதிய வீட்டில் உங்கள் வாழ்க்கையை புத்துணச்சியுடன் தொடங்குங்கள்.

Related posts

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் சில நடைமுறைகள்

nathan

குட்டி தூக்கம் நல்லதா ?

nathan

கண்ணெரிச்சலில் இருந்து தீர்வுக் காண ஸ்பெஷல் எண்ணெய் குளியல்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க… உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து இதுவா? உங்கள் குணத்தை சொல்லும் ஜப்பான் நாட்டின் பிரபல ஜோதிடம்

nathan

உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவதை தடுக்கும் எளிய வழிமுறைகள்

nathan

தெரிந்துகொள்வோமா! புதன் கிழமை பிறந்தவங்களோட குணம் எப்படி இருக்கும்-ன்னு கொஞ்சம் பாருங்க…

nathan

ஸ்வீட் எஸ்கேப் – 6

nathan

இதன் காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போகநேரிடலாம்.

sangika

பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன … தீர்வுக்கு இத படிங்க!

nathan