29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
baby
ஆரோக்கியம் குறிப்புகள்

அவசியம் படிக்கவும் !தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் கருப்பட்டியின் மகத்துவத்தை பாருங்க.

நம் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான இடம் பிடித்த ஒன்று கருப்பட்டி. இன்று இந்த கருப்பட்டியை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் இதில் அடங்கியுள்ள எண்ணற்ற பலன்களைப் பற்றி அறிந்து கொண்டால் நாம் நிச்சயம் இதனை மீண்டும் பயன்படுத்த துவங்குவோம்.

ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

baby

சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும். காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

நீரிழிவு நோயாளிகள் கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நமது உடலுக்கு தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.-Source: spark

Related posts

தொப்புளில் 2 சொட்டு தேன் விட்டு படுத்தால் உடலில் நடக்கும் அற்புத பயன்கள்

nathan

பிறப்புறுப்பில் தொற்று மற்றும் வீட்டு மருத்துவம்

nathan

சிம்பிளா செய்யலாம் சப்பாத்தி வெஜ் ஸ்டஃபிங்

nathan

வாரம் ஒருநாள் டயட்டால் இத்தனை நன்மைகளா????

sangika

மாதவிடாய் காலத்தில் அரிப்பு ஏற்படாமல் இருக்க தரமான சானிட்டரி பேட் உபயோகியுங்க

nathan

பெற்றால் மட்டும் போதுமா? நல்ல பிள்ளையாக வளர்க்க என்ன செய்யனும்?

nathan

பிரா: அழகு.. பாதுகாப்பு.. ஆரோக்கியம்

nathan

உடல் வெப்பம் அதிகரிக்கிறதா? சிறுநீரைப் பார்த்துக் கண்டுபிடியுங்கள்

nathan

இதோ சில எளிய வழிகள்! எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?

nathan