பெரும்பாலான வீடுகளில் அழகுக்கான வைக்கப்பட்டிருக்கும் செடி தான் இந்த நந்தியாவட்டம். இது எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்ற ஒரு மூலிகை இனம் மூன்று வகையான நந்தியாவட்டம் உண்டு. இந்த பூக்களை வைத்துதான் இதன் வகைகளை வுறுபடுத்துவார்கள். அவற்றைப் பற்றி இங்கு விளக்கமாகக் காண்போம்.
இதனுடைய இலை முதல், மலர், பட்டை, வேர், பழுத்த இலைகள் என ஒவ்வொரு இன்ச்சும் மருத்துவப் பயன்பாடுகள் கொண்டது. நாமோ இதை வெறுமனே அழகுக்கான வீட்டின் முன் வளர்க்கிறோமே தவிர, இதனுடைய மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வதில்லை. அவற்றைப் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
வகைகள் ஓரிதழ் நந்தியாவட்டம் ஈரிதழ் நந்தியாவட்டம் மூவிதழ் நந்தியாவட்டம் என மூன்று விதங்களில் இருக்கின்றன.இவற்றின் மருத்துவ குணங்களில் எந்தவித மாற்றமும் கிடையாது. பூக்களின் அளவு மற்றும் இதழ்களி மட்டுமே மாறுபட்டிருக்கும்.
ஒற்றை நந்தியாவட்டம் ஓரிதழ் நந்தியாவட்டம் என்பது ஒற்றை அடுக்கு கொண்ட மலராகும். இது 5 இதழ்களைக் கொண்டது. கொத்துக் கொத்தாக மலரும். வெளிர் பச்சை நிறத்தில் இதனுடைய இலைகள் நீள்வட்டமாக இருக்கும். ஒரே செடியில் நூற்றுக்கணக்கில் பூக்கும். இது பூஜைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மூன்று வகைன நந்தியாவட்டமும் ஒரே மாதிரியான பலன்கள் கொடுத்தாலும் இந்த ஒற்றை நந்தியாவட்டத்தில் மருத்துவ குணங்களும் அதற்கான வீரியமும் மிக அதிகம். குச்சியாக இதை நட்டு தண்ணீர் ஊற்றி வந்தாலே நன்கு வளரும் தன்மை கொண்டது. இது செடி வகை தான். ஆனால் சில ஆண்டுகள் வளர்த்தால், இது ஒரு குறு மரமாக வளரும் தன்மையும் கொண்டது.
இரண்டடுக்கு மலர் முழுக்க முழுக்க மருத்துவ குணங்கள் கொண்டது. இதனுடைய இலை, பட்டை, வேர், மலர் என அத்தனையும் பயன்தரும். எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
மூன்றடுக்கு இந்த மூன்றடுக்கு நந்தியாவட்ட மலர் மூன்றடுக்கு இருக்கும். இந்த செடியின் இலைகள் கொஞ்சம் அடர்ந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
மருத்துவப் பயன்கள் கண் பிரச்சினைகள் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் இந்த நந்தியாவட்டப் பூ தீர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டது. கண் எரிச்சல், கண் உஷ்ணம் குறைய, கண் பார்வை தெளிவடைய என அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியது.
என்ன செய்யலாம்? இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் 10 பூக்களை தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அதை காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரில் கண்களை அலச வேண்டும். தண்ணீரை கண்களுக்கு அருகில் வைத்து, அதில் மூடியும் முழித்துப் பார்க்கலாம். அப்படி செய்து வந்தால், கண் உஷ்ணம் குறைந்து கண் பார்வை தெளிவடையும். இரவில் அதேபோல் இந்த பூக்கள் சிலவற்றை எடுத்து, அதை வெள்ளைநிற காட்டன் துணியில் கட்டி, கண்ணின் மேல் வைத்துக்கொண்டு தூங்கினாலும் கண்ணில் உள்ள சூடு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும்.
பல் வலிக்கு நந்தியாவட்ட செடியின் வேர்ப்பகுதியை சிறிதளவு எடுத்து, நன்கு வாயில் மென்று இந்த அந்த சாறு பல்லின் வேர்க்கால்களில் இறங்கினால் பல் வலி உடனடியாக குணமடையும் ஆற்றல் கொண்டது.
காயங்கள் அடிபட்ட காயங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக காணப்படுகிறது. நம்முடைய உடலில் எங்காவது காயங்கள் ஏற்பட்டிருந்தால், அதில் தண்ணீர் பட்டால் ஒரு சில நாட்களில் சீழ் பிடித்துவிடும். அதனால் இந்த செடியின் கிளையை ஒடித்தால், வெள்ளை நிறத்தில் பால் வடியும். அந்த பாலை புண்களில் தடவினால், புண்ணும் விரைவில் ஆறும். சீழ் பிடித்துவிடும் என்ற பயமும் கிடையாது.
ரத்த அழுத்தம் ரத்த அழுத்தம் தற்காலத்தில் பெரும்பாலும் நிறைய பேருக்கு இருக்கிறது. குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம். அப்படி ரத்த அழுத்தம் அதிகமானால் அது இதயப் பிரச்சினைகளைக் கொண்டு வந்துவிடும். அதை போக்குவதற்கு மிகச்சிறந்த மருந்தாக இந்த நந்தியாவட்டம் பயன்படுகிறது. இந்த நந்தியாவட்ட இலைகள் சிலவற்றைப் பறித்து, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் சரியாகும்.
பட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த செடியின் பட்டையையும் பல்வேறு கூட்டு மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த பட்டையும் கண் மற்றும் சருமப் பிரச்சினைகளுக்கு லேகியங்கள் மற்றும் சூரணங்கள் செய்யும்போது, கூட்டு மருந்துகளில் ஒன்றாகப் பயன்படுகிறது.
மூலிகை பல்பொடி நந்தியாவட்டப் பூக்களை நிழலில் உலர்த்தி, அதை மூலிகை பல்பொடியில் சேர்க்கப் படுகிறது. பற்களின் வேர்கள் உறுதியாகும். சொத்தைப்பல் வராமல் பார்த்துக் கொள்ளும். பல் வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்றவற்றையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. இந்த செடியின் காய்ந்த குச்சிகளை எரித்து, அந்த சாம்பலைக் கூட, பயன்படுத்தி பல் துலக்கி வரலாம். பல் வலி குணமடையும்.
Source : Boldsky