ஏதேனும் ஒரு எதிர்பாராத விடயம் ஏற்பட்டு விட்டாலோ அல்லது புதிய எதிர்பாராத நிகழ்வு ஒன்று ஏற்பட்டாலோ எம்மில் நிதானமாக அதற்கு முகங் கொடுப்பவர்கள் மிகக் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், மேற்குறிப்பிட்டவாறான சந்தர்ப்பங்களில் பதற்றம் அடைபவர்களே எம்மில் அதிகம். ஆனால் இந்த பதற்றத்தை குறைக்க வழி ஒன்று உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?
பொதுவாக எலுமிச்சம் பழமானது மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கும் வல்லமை கொண்டது.
அதே போலத் தான் தேன். தேனை தேவைக்கு ஏற்பட்டவாறு உட்கொள்வதன் மூலமூம் பதற்றத்தை குறைக்க முடியும்.
தேன் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு போன்றவற்றை உபயோகப்படுத்தி பதற்றத்தை எவ்வாறு குறைப்பது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
01. ஒரு தேக்கரண்டி எலுமிச்சம்பழச் சாறு
02. ஒரு தேக்கரண்டி அரைத்த இஞ்சி
03. அரைத் தேக்கரண்டி தேன்
செய்முறை
மேற் குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் நாளொன்றுக்கு மூன்று தடவைகள் வீதம் இதனை உட்கொண்டு வருவதன் மூலம் பதற்றத்தை இலகுவில் குறைக்கலாம்.