26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
famsmallbib7d50
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

முட்டை கருவுறுவதுதான் கர்ப்பப்பையின் முக்கியமான தருணம். கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையை அடையும்போது முட்டையின் மஞ்சள்பகுதி தீர்ந்துவிடுகிறது. உணர்விகளைப் பயன்படுத்தி முட்டை, கர்ப்பப்பை உள்ளடுக்கில் (எண்டோமெட்ரியம்) ஒட்டிக்கொள்கிறது.famsmallbib7d50

கர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.

ஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.

கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…

டிஸ்மெனோரியா – மாதவிலக்குப் பிடிப்பு

பைப்ராய்ட்ஸ் – கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் – பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் – கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

புரோலாப்ஸ்?- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.

எக்டோபிக் கருவுறுதல் – கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.

ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) – கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

கர்ப்பப்பை புற்றுநோய் – மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே

கண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற

ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.

பிற அபாய காரணிகள்:

* கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி

* குண்டாகுதல்

* `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது

* மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது

* இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை

* குடும்ப பாரம்பரியம்

* குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.

Related posts

உங்க மென்மையான சருமத்திற்கு ஏற்ற மூலிகைகள் தெரியுமா!!!

nathan

குழந்தைகளுக்கு சுகாதாரம் பற்றி கட்டாயமாக கற்றுக் கொடுங்க…!

nathan

உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்க சில எளிமையான டிப்ஸ்…

nathan

கேள்விப்பட்டிருக்கின்றீர்களா தாய்ப்பாலில், அலங்கார நகைகள் பற்றி?

nathan

எது தாய்-மகள் உறவை பலப்படுத்துகிறது -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வெந்நீர் வெறும் வயிற்றில் குடித்தால் என்ன ஆகும்?

nathan

நீங்க நல்ல பெஸ்ட் ஹஸ்பெண்ட்டா? 100க்கு எத்தன மார்க் வாங்குறீங்கன்னு பார்க்கலாமா?

nathan

சில்லி பேபி கார்ன்

nathan

கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ!

nathan