28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
17 1508221895 1leaves
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ் குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம்!!கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம் !!

அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், அதன்மூலம் உடல் வளம், மன வளம் கிடைக்கப்பெற்று, பல்லாண்டுகள் நலமுடன் வாழ்ந்தனர்.

17 1508221895 1leavesதமிழகத்தில் ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில், நிழல் தரும் மரமாக அதிகம் காணப்படும் அரச மரம், சிலரால் தோட்டங்களில், மிகப்பெரிய பண்ணை வீடுகளில், காற்றுத்தூய்மைக்காக வளர்க்கப்படுகிறது. மரங்களை ஆன்மீகத்தில் இணைத்து, அதன் பெருமைகளை அதன் மூலம் பரப்பி வந்தனர், நம் முன்னோர்கள், இதன் விளைவாகவே, நாவல் மரம், அத்திமரம், வேப்பமரம், ஆல மரம் அரச மரம் உள்ளிட்ட மரங்களில் எல்லாம் கடவுள் வாசம் செய்வதாகக்கூறி, அந்த மரங்களை மக்கள் தங்கள் தேவைக்கு அழிக்காமல் அவற்றை எங்கும் வளர்த்து, அந்த மரங்களை காப்பாற்றி, அந்த மரங்களின் நல்ல ஆற்றல் மூலம், மனித இனம் தழைக்க, பேருதவி செய்தனர்.

அவ்வாறு அவர்கள், அந்த மரங்களை வேறு சாதாரண மரங்களைப்போல கூறியிருப்பார்களேயானால், இன்று நாம் காண்பதற்கு அரிதாகிப்போன, மனிதர்க்கு நலம் பல செய்யும், வாத நாராயணன் மரம், மருத மரம், நுணா மரம் உள்ளிட்ட பல மரங்கள் அரிதானதைப்போல, இந்த மரங்களும் அரிதாகி, அழிந்திருக்கக் கூடும். முன்னோர்கள் ஆன்மீகத்தில் இணைத்துக் கூறிய மரங்கள் யாவும், மனிதர்க்கு தீங்கு இளைக்கும் கார்பன் மோனாக்சைடு வாயுவை அதிகம் சுவாசித்து, மனிதர்க்கு சுவாசத்திற்கு, உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உறுதுணை புரியும் ஆக்சிஜனை அதிக அளவில் வெளியுடுகின்றன. இந்த நல்ல வாயுக்கள் காற்றில் அதிகம் கலந்து, காற்று மாசுபாட்டை, குறைத்து, மனிதர் சுவாசிக்க ஏற்ற காற்றை, தாம் வளரும் இடங்களில், பரப்பி வருகின்றன.

அரச மரம், மனிதரின் சுவாசத்திற்கு நலம் தரக்கூடிய ஆக்சிஜனை, மிக அதிக அளவில் வெளியிடுகிறது, இதன் மூலம் அதிகாலை வேளைகளில், இந்த மரங்களின் அருகே நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோர், இந்த தூய காற்றை அதிக அளவில் சுவாசித்து, உடல் ஆரோக்கியம் மேம்பட்டு, மனத் தெளிவையும் அடைவர். அரச மரம், வெளியிடும் காற்றில் உள்ள பல நுண்ணிய ஆற்றல்கள், மனிதரின் எண்ணங்களை, செயல் திறன்களை, சீராக்கும் தன்மை மிக்கவை, அரச மரத்தினை தினமும் காலை வேளைகளில் சுற்றிவரும் குழந்தைப்பேறில்லாத பெண்கள் விரைவில் மகப்பேறடைவர், அரச மரத்தில் உள்ள நுண்ணிய ஆற்றல் அலைகள், மனிதர்களின் எண்ணங்களை தூய்மை செய்வது மட்டுமல்ல, பெண்களின் கருப்பை பாதிப்புகளையும் சரிசெய்து, அவர்களின் கருவுறும் தன்மையை இயல்பாக்குகின்றன.

அரச மரத்தின் இலைகள், பழங்கள், பட்டைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவ நன்மைகள் மிக்கவை.

அரச மரத்தின் இலைகளின் மருத்துவ பலன்கள் உடல் சூடு மற்றும் புண்களின் காரணமாக, வயிற்று வலி உண்டாகலாம், அதைப் போக்க, அரச இலைத் தளிர்களை, மோரில் அரைத்து பருகி வரலாம். மேலும், அரச இலைத் தளிர்களை பாலில் கலந்து பருகிவர, ஜுரம் விலகும்.

ரத்தப் போக்கு :

மாத விலக்கு நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கை குணப்படுத்த, அரச இலைகளோடு, அத்தி, நாவல் இலைகளை நீரில் சுடவைத்து, பருகி வரலாம்.

மூல வியாதி :

அரச மரம், ஆல மரம் மற்றும் அத்தி மரம் இவற்றின் இலைக் கொழுந்துகளை அரைத்து சாப்பிட, இரத்தம் வடியும் நிலையில் உள்ள மூல வியாதிகள் குணமாகும்.

முறையற்ற மாதவிலக்கு :

அரச மரத்தின் இலைகள், வேர், விதை மற்றும் பட்டைகளை சேகரித்து அவற்றை தூளாக்கி, பெண்கள் மாத விலக்கின் போது, சிறிது நீரில் இட்டு கொதிக்க வைத்து பருகி வர, கருப்பை பாதிப்புகள் நீங்கி, நலம் பெறலாம்.

தழும்பு :

அரச மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்த பழுப்பு நிற இலைகளை. தணலில் இட்டு தூளாக்கி, தேங்காய் எண்ணையில் கலந்து, தீக்காயங்கள் ஏற்பட்ட இடங்களின் மேல் இட்டு வர, காயங்கள் குணமாகி, தழும்புகளும் மறைந்து விடும். அரசம் பட்டையை வறுத்து பொடியாக்கி, ஆறாத நெடுநாள் காயங்கள், சொறி, சிரங்கு இவற்றின் மேல் தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர, அவை சரியாகி விடும்.

உயிரணுக்கள் அதிகரிக்க :17 1508221939 6sperm

அரசம் பழத்தை பதப்படுத்தி உயிரணுக் குறைபாட்டால், மகப்பேறின்மை பாதிப்புள்ள ஆண்கள் தினமும் சாப்பிட்டு வர, உயிரணுக்கள் அதிகரித்து, விரைவில் குறைகள் நீங்கப் பெறலாம். அரச விதைகளை பாலில் கலந்து பருக, உயிர்த்தாதுக்கள் வளமா

கர்ப்பப்பை பாதிப்பு நீங்க :

அரச மரத்தின் வேர், விதை மற்றும் பட்டை இவற்றை, பாலில் இட்டு காய்ச்சி, தினமும் தொடர்ந்து பருகி வந்தாலும், ஆண்களின் உயிரணு குறைபாடு நீங்கும், பெண்களின் கருப்பை பாதிப்புகளும் சரியாகும்.

சுவாச பாதிப்புகளை நீக்க :

சமய சடங்குகளில் முக்கிய இடம் வகிப்பது ஹோமங்கள், அவை, கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ விஷேச நிகழ்வுகளின் போது நடத்தப்படும். அந்த ஹோமங்களில் வளர்க்கப்படும் தீயில், அரச வித்துக்கள் எனப்படும் அரசங்குச்சிகள் கட்டாயம் இருக்கும். இந்த அரச மரக் கிளையின் குச்சிகளிலிருந்து வெளி வரும் புகையானது, சுவாசிப்பவர்களின் சளி, மூச்சுத்திணறல் பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது. மேலும், அதிக களைப்பு, உடற்தளர்ச்சி போன்ற பாதிப்புகளையும் போக்கி, உடல் தசைகளை வலுவேற்றக் கூடியது, இதுபோல ஏராளம் பலன்கள் உண்டு, அரசம் பட்டையிலும்.

வாய்ப்புண் ஆற :

அரசம் பட்டையை நீரில் சுடவைத்து, வாய் கொப்புளிக்க, வாய்ப் புண்கள் ஆறிவிடும். அரசம் பட்டையை தூளாக்கி, சிறிது நீரில் இட்டு, கொதிக்க வைத்து பருக, சரும வியாதிகள் குணமடையும். இதையே, பாலுடன் சேர்த்து பருகிவர, தொடர் இருமல் குணமடையும்.

மலச்சிக்கல் தீர :

அரசம் பட்டை பொடியை சாம்பலாக்கி, அதை மிகச்சிறியளவு நீரில் ஊற வைத்து பருகிட, விக்கல் நின்றுவிடும். அரச விதையை பொடியாக்கி, சிறு அளவு தினமும் சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். ரத்த வாந்தி நிக்க : இரத்த வாந்தி குணமாக, அரச மற்றும் ஆல விதைகளை பொடியாக்கி, பாலில் கலந்து பருகிவரலாம்.

சரும அலர்ஜி குணமாக :

இக்காலங்களில், பெண்களைப்போல ஆண்களும் அதிக அளவில் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்கிறார்கள், அந்தக் குங்குமம் மஞ்சள் சுண்ணாம்பு போன்ற இயற்கை முறையில் தயாரிக்கப்படாமல், செயற்கை முறையில் தயாரித்திருந்தால், நெற்றியில் குங்குமம் இட்ட இடத்தில் தோல் கறுத்து, அவ்விடங்களில் அரிப்பு ஏற்படக்கூடும். அந்த பாதிப்பு உள்ளவர்கள், அரச மரப்பட்டையை நீரில் ஊற வைத்து, அதை நெற்றியில் அரிப்பு உள்ள இடத்தில் தடவி வர, தோல் இயல்பான நிறத்திற்கு மாறும், அரிப்பும் நீங்கும்.

வெடிப்பு மறைய :17 1508221989 12crack

அரச மரத்தை, அதன் பட்டைப்பகுதியை சிறு கத்தியால் அல்லது அரிவாளால் கீற, அவ்விடங்களில் இருந்து, அரசம் பால் வழியும், அந்தப் பாலை சேகரித்து, பாதங்களில் பெரும் சிரமங்களை தந்து வரும், பித்த வெடிப்புகளின் மேல் பூசி வர, அவை யாவும் விரைவில் மறையும்.

 

Related posts

பதினாறு செல்வங்களில் முக்கியமானது குழந்தைச் செல்வம்….

sangika

தாய்ப்பாலின் மகத்துவம்

nathan

தெரிஞ்சிக்கங்க…சொத்தைப் பற்களை வீட்டிலேயே சரிசெய்ய உதவும் சில வழிமுறைகள்!!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் குழந்தைகளைத் தாக்கும் டைப்-1 சர்க்கரைநோய்

nathan

பேக்டீரியா தொற்றினை தவிர்க்க அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டியவை! தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தோல்நோயை குணப்படுத்தும் கஸ்தூரி மஞ்சள்!

nathan

உங்களுக்கு தெரியுமா? ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்!

nathan

ஆண்களுக்கு ஏற்படும் 5 முதன்மையான ஆரோக்கிய பிரச்சனைகளும்… எதிர்கொள்ளும் வழிமுறைகளும்…

nathan

உங்களுக்கு தெரியுமா சூடுபடுத்தி உண்ணக் கூடாத உணவுகள்! அறிந்து கொள்ளுங்கள்!

nathan