22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
handwash
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

எவ்வாறு நோய்களில் இருந்து காத்து கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்!…

யாருக்கு தான் நோய்கள் இல்லை. நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும் நோய்களின் பாதிப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதை சாப்பிட்டால் நோய்கள் உண்டாகும், அதை சாப்பிட்டால் நோய்கள் ஏற்படும் என பல வகையான பேச்சுக்களை நாம் கேட்டிருப்போம். இவை அனைத்துமே ஏதோ ஒரு வகையில் உண்மையோடு தொடர்பு கொண்டுள்ளது.

உணவு உண்ணும் பழக்கத்தை பொருத்தும், எவ்வளவு உண்கிறோம் என்பதை பொருத்தே நம் ஆயுள் நீடிக்குமா? இல்லையா என கூற இயலும். இது ஒவ்வொருவரின் உடல் அமைப்பிற்கும் ஏற்ப மாறுபடும்.

இந்த வகையில் எப்படிப்பட்ட முறையில் சாப்பிட்டால் நமக்கு நோய்கள் வராது என்பதையும், எவ்வாறு நோய்களில் இருந்து காத்து கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதையும் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.

நலம் தானா?

சில நாட்களுக்கு முன்னர் பார்த்த ஒருவரை மீண்டும் பார்த்தாலே எப்படி இருக்கீங்க? நலம் தானா? என்று அவரை பற்றி குசலம் விசாரிப்போம். இது மனித இயல்பு.

அப்படி ஒருவர் நம்மை விசாரிக்கும் போது ஆரோக்கியத்துடன் நாம் இருந்தால் அது சிறந்த மனப்பான்மையை நமக்கே நமக்குள் உண்டாக்கும்.

இதுவே நோய்களுடன் இருந்தால் துன்பம் தான் வாழ்க்கையாக இருக்கும்.

வாஸ்து!

வாஸ்து பார்த்து வீட்டை கட்ட வேண்டும் என்பார்கள். இது ஆன்மீகத்தின் படி பலரால் நம்பவும் செய்கிறது. இதே போன்று வாஸ்து படி நாம் சாப்பிட வேண்டும் என பண்டைய வாஸ்து முறைகள் சொல்கின்றன.

இதன் படி செய்து வந்தால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

பாரம்பரிய முறை

நம் முன்னோர்கள் வாஸ்துப்படி தான் பல விஷயங்களை செய்து வந்தனர். தூங்கும் போதும், சாப்பிடும் போதும், செய்கின்ற தொழிலையும் இவர்கள் வாஸ்து பார்த்து தான் செய்து வந்தனர்.

இவர்கள் தந்த குறிப்புகள் தான் இவர்களை நீண்ட நாட்கள் நோய்கள் இல்லாமல் வாழ வைத்தது. வாஸ்துவிற்கு என்று சிலபல வரையறைகள் எப்போதுமே உண்டு.

சமையல் அறை

வாஸ்துப்படி சாப்பிடுவதற்கு முன்னர், அதன் படி நாம் சமையல் அறை மற்றும் சாப்பிடும் இடத்தை அமைத்திருக்க வேண்டும்.

வீட்டை ஏதோ ஒரு கோணத்தில் கட்டிவிட்டு அதன்பின் நிம்மதியில்லை என கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பதை நீங்களே எண்ணி கொள்ளுங்கள்.

வாஸ்து முறை

சாப்பிடும் போது உட்கார்ந்து சாப்பிட கூடிய திசை மிக முக்கியமானது. கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கிய படி சாப்பிடுவது முழு ஆற்றலையும் உடலுக்கு பெற்று தரும்.

மேலும், இதனால் எந்தவித உடல்நல கோளாறுகளும் உங்களுக்கு ஏற்படாது.

திசை!

எப்போதுமே தெற்கு திசையை நோக்கிய படி உட்கார்ந்து சாப்பிட கூடாது. இந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள், வயிற்று உபாதைகள் முதலிய பிரச்சினைகள் உண்டாகும்.

அத்துடன் இது நல்ல ஆற்றலை உடலுக்கு ஏற்படுத்தாது.

handwash

சுத்தம்

எப்போதுமே கைகால்களை சுத்தமாக கழுவி விட்டுத்தான் சாப்பிட வேண்டும். அதுவும் பாதங்களை கட்டாயம் கழுவி இருக்க வேண்டும்.

இது உடலின் தட்பவெப்பத்தை சமமாக வைக்க உதவும். அதோடு செரிமான கோளாறுகளையும் தடுக்கும்.

ஒன்றாக…

குடும்பத்தில் உள்ள எல்லோரும் முடிந்தளவுக்கு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டால் பலவித பயன்கள் ஏற்படும். இதனால் ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவித ஆத்ம திருப்பி ஏற்படும். இது வீட்டிலும் நல்ல சக்தியை கொண்டு வரும்.

இதனால் நீங்கள் அதிக காலம் நோயில்லாமல் இருக்கலாம்.

Related posts

kuppaimeni uses in tamil – குப்பைமேனி (Acalypha Indica) பயன்பாடுகள்

nathan

பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகும் பிரச்சனைகள்

nathan

பெண்களே 40 வயதை கடந்துவிட்டீர்களா!

nathan

அல்சர் நோயை குணப்படுத்தும் திராட்சை

nathan

வாதம் போக்கும், சூடு தணிக்கும்… கோரை, ஈச்சம் பாய் நல்லது!

nathan

ஆடை அழகாக அணிவது மட்டும் முக்கியமல்ல நம் உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது ரொம்ப அவசியமானது!….

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஷேவ் செய்த பின்னும் சருமம் வழுவழுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

ஆண்கள் அவங்க ராசிப்படி காதல் முறிவிற்கு எப்படி பழிவாங்குவாங்க தெரியுமா?பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்க சில எளிமையான டிப்ஸ்…

nathan