23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
patham
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

தினமும் 6 பாதாம்கள் போதுமானது!….

பாதாம் பருப்பில் உடலுக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வைட்டமின் ஈ, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், செம்பு, செலினியம் போன்றவை இருக்கின்றன. அதனால் பல உணவு பதார்த்தங்களில் பாதாம் இடம்பெற்றிருக்கிறது.

எனினும் பாதாமை அளவோடுதான் சாப்பிடவேண்டும். உடலுக்கு நன்மை சேர்க்கிறது என்பதற்காக அளவுக்கு மீறி சாப்பிட்டால் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். குறிப்பாக உடல் பருமனாகிவிடும்.

அதில் கலோரிகளும், கொழுப்பும் அதிகம் இருக்கிறது. ஆதலால் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும்.

patham

நம் உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்து தேவைப்படுகிறது.

ஆனால் ஒரு கப் பாதாமில் 25 மில்லி கிராம் வைட்டமின் ஈ உள்ளடங்கி இருக்கிறது. அதனால் அளவுக்கு அதிகமாக பாதாம் சாப்பிட்டால் வயிற்று போக்கு, உடல் சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அதுபோல் தினமும் உடலுக்கு 10 மில்லி கிராம் மெக்னீசியம் போதுமானது.

ஆனால் பாதாமில் மெக்னீசியத்தின் அளவு அதிகம் என்பதால், அளவுக்கு மீறி சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

அதிக பாதாம் சாப்பிட்டால் ஒவ்வாமை பிரச்சினையையும் உருவாகும். பாதாமுடன் காரமான உணவு பதார்த்தங்களை சேர்த்து சாப்பிடக் கூடாது.

அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சுத்தன்மை உண்டாக வாய்ப்பிருக்கிறது. பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துவிட்டு காலையில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் முழுமையான ஆரோக்கிய பலனை அனுபவிக்க முடியும். தினமும் 6 பாதாம்கள் போதுமானது.

Related posts

ஓட்ஸ் டயட் ரொட்டி

nathan

பெண்கள் ஆரோக்கியத்திற்கு தினமும் சேர்த்து கொள்ள வேண்டிய உணவுகள்

nathan

சூப்பர் டிப்ஸ் செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

nathan

உங்களுக்கு தெரியுமா கிராம்பின் மருத்துவ நன்மைகள்?

nathan

பெண்களே நீங்கள் அதிகம் கோபப்படுபவரா? அப்ப இத படிங்க!…

sangika

பித்தம், அஜீரணம், வாய்க்கசப்பை போக்கும் தனியா பத்திய குழம்பு

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா செய்முறை

nathan

மிளகு தூளுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுங்க:சூப்பர் டிப்ஸ்

nathan

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது……

sangika