25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
ulunthu
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுபெண்கள் மருத்துவம்

பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்த இதை செய்யங்கள்!…

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு:

இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு:

விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சை பயறு:

புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து குறைய உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை:

கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு:

இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

சுண்டல்:

கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு:

ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி:

பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும்.

இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டை பயறு:

தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

ulunthu

உளுத்தம் பருப்பு:

இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது.

அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

Related posts

மூட்டு வலிகளுக்கும் சர்க்கரை நோய்க்கும் அருமருந்தாகும் பூசணிக்காய்

nathan

இந்த காய்கறிகள் உண்மையில் வித்தியாசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம் தெரியுமா?

nathan

நீங்கள் இரவில் செய்கின்ற செயல்கள் கூட உங்களுக்கு இது போன்ற பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது….

sangika

சர்க்கரை நோயாளிகளுக்கான பாகற்காய் ஜூஸ்

nathan

7 நாட்களில் 10 பவுண்ட் அளவுக்கு எடையைக் குறைக்கும் முட்டைகோஸ் சூப்! எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டில் டோனட்ஸ் தயாரிப்பது எப்படி?

nathan

இதோ எளிய நிவாரணம்! மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் நார்ச்சத்து உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இளமை பொலிவு தரும் ‘இளநீர்’

nathan

ஃபிட்னஸ்ஆர்வம் கொண்ட எல்லோரும் இதனை அறிந்துகொள்வது அவசியம்!…

sangika