29.2 C
Chennai
Wednesday, Jul 30, 2025
karumpulli
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

சூரிய ஒளி அதிகம் படுவதாலும், நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும்,சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், சரியான தூக்கம் இல்லாமலும், மன அழுத்தம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கமான ஒன்று.

ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். சரி வாங்க ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்க்கலாம்.

karumpulli

பால் – ஒரு டீஸ்பூன் ,
மஞ்சள் பொடி – ௨ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு தேவையான அளவு.

இவை மூன்றையும் ஒன்றாக கலந்துகொண்டு முகத்தில் குறைந்தது 15 நிமிடம் ஃபேஸ் பேக் போடவும். வாரத்தில் 3 முறை இதுபோன்று செய்துவந்தாலே போதும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

அடுத்ததாக பப்பாளியைக் கொண்டு எப்படி நம்ம முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் அகற்றுவது என்பதை பார்க்கலாம்.

கொஞ்சம் பப்பாளி சாறு, கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கொஞ்சம் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நம் முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக காணப்படும்.

பொதுவாகவே சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் கற்றாழையை கொண்டு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றலாம்.

அதேபோன்று உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு பொரியல் செய்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மையும் குறைந்துவிடும். வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும் ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Related posts

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

nathan

இந்த ராசிகள் அநேகமாக உங்களை ஏமாற்றலாம்!தெரிந்துகொள்வோமா?

nathan

நண்பர்களே! வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள்

nathan

சில நிமிடங்களில் வசிகரிக்கும் அழகை பெற அழகுக் குறிப்புகள்…….

nathan

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா?இதை படியுங்கள்…

nathan

லிப்ஸ்டிக் போடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை அதிகரிக்கும்போது செய்யும் தவறுகள்

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகள்!

nathan