பெண்கள் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். அது அனைவரும் தெரிந்த ஒன்றே. எந்த ஒரு விஷேசமான நிகழ்ச்சியாக இருந்தாலும் தான் அணிந்திருக்கும்ஆடை அனைவரையும் விட தனியாக தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
ஆடைகளின் மேல் ஈர்ப்பு இல்லாதவர்கள் மிகவும் குறைவே. அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ஆசை என்பதோ ஒன்று தான்.
அணிந்திருக்கும் ஆடைகள் கச்சிதமாக தெரிவதற்கு தங்களது உள்ளாடைகளை பெண்கள் இறுக்கமாக அணிவது வழக்கமாக வைத்து வருகின்றனர்.
அதனால் நிறைய பிரச்னைகள் வரும் என்பதை யாரும் அறியாமல், இறுக்கமாக அணிவதை மாடலாக வைத்துள்ளனர்.
இறுக்கமாக அணிவதனால் அவ்விடத்தில் அறிப்பு ஏற்படும். ஆனால் அது எப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பதில்லை. இதனால் ரத்த ஓட்டம், நெஞ்செரிச்தல், அலர்ஜிகள் போன்றவை உண்டாகும்.
வயிறு வரை ஏற்றி இறுக்கமாக உள்ளாடைகளை அணிவர், அவ்விடத்தில் காற்று போகமால் வியர்வை அதிகமாகி பாக்டீரியா தொற்று ஏற்படும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
காற்றோட்டம் தேவைப்படும் இடத்துக்கு காற்றோட்டம் அளிக்க வேண்டும். அவ்விடத்துக்கு காற்றோட்டம் அளிக்காவிட்டால் நிறைய உடல் ரீதியான பிரச்னைகள் பலரும் சந்திக்க கூடும்.
இதுமட்டுமல்ல இரவு நேரங்களில் உள்ளாடைகளை இறுக்கமாக நிச்சயம் அணியக்கூடாது, அதை முற்றிலும் தவிர்க்கவும். அவ்விடத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்காது, இதனால் நரம்புகள் உணர்ச்சியற்று போக அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆடை அழகாக அணிவது மட்டும் முக்கியமல்ல நம் உடலையும் ஆரோக்கியமாக எந்த ஒரு நோய்யின்றியும் வைத்து கொள்வது ரொம்ப அவசியமானது, தேவையானதும் கூட.