ஆண்களுக்கு

யாருக்கெல்லாம் விறைப்பு பிரச்சினை ஏற்படும்?

விறைப்பு பிரச்சினை

உறவில் நீண்ட நேரம் நிலைத்திருக்க வேண்டுமெனில் ஆணுறுப்பு விறைப்பு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.

உங்களுடைய மனநிலை, மூளை, நரம்புகள், ஹார்மோன்கள், இரத்த நாளங்கள் என அனைத்தும் சரியான

அலைவரிசையில் இருக்கும்போது மட்டுமே உங்கள் ஆணுறுப்பு சரியான விறைப்பை அடையும். இதில் ஒன்று சரியாக செயல்படாவிட்டாலும் உங்களுக்கு விறைப்பு பிரச்சினை ஏற்படும்.

முழுமையான உறவில் ஈடுபட உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு மனஆரோக்கியமும் முக்கியம்.

தற்காலிக விறைப்பு பிரச்சினை

ஆண்களுக்கு விறைப்பு பிரச்சினை இருக்கிறதா? இல்லையா? என்பது அவர்களுக்கே புரியாத ஒரு நிலையாகும்.ஏனெனில் சிலசமயம் பதட்டத்தால் அப்போது மட்டும் ஆணுறுப்பு எழுச்சியடையாது எனவே தங்களுக்கு விறைப்பு குறைபாடு உள்ளது என்று ஆண்கள் தவறாக நினைத்துக்கொள்ள கூடாது.

அது தற்காலிகமான விறைப்பு பிரச்சினைதான். உங்களுக்குள் நீங்கள் கேட்டுக்கொள்ளும் மூன்று கேள்விகள்தான் உங்களுக்கு விறைப்பு பிரச்சினை உள்ளதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கும்.

ver

மூன்று கேள்விகள்

இந்த கேள்விகளை உங்களுக்குள் நீங்களே கேட்டுக்கொண்டு அதற்கான விடையை நீங்களே சரிபார்த்துக்கொள்ளுங்கள்,

1. விரும்பும் நேரத்தில் விறைப்பை பெறுவதில் உங்களுக்கு சிக்கலை இருக்கிறதா?

2. திருப்திகரமான உறவில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு இருக்கும் விறைப்பு போதுமானதாக இருக்கிறதா?

3. பெண்ணுறுப்பில் எளிதாக ஊடுருவும் அளவிற்கு உங்கள் ஆணுறுப்பு மென்மையாக இருக்கிறதா?

இந்த மூன்று கேள்விகளுக்கான உங்களின் பதில்களே உங்களுக்கு விறைப்பு குறைபாடு உள்ளதா என்று தீர்மானிக்கும்.

யாருக்கெல்லாம் விறைப்பு பிரச்சினை ஏற்படும்?

பொதுவாகவே இந்த ஆண்களுக்குத்தான் விறைப்பு பிரச்சினை ஏற்படும் என்று கூற இயலாது. ஆனால் சில பழக்கவழக்கங்கள் இந்த பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள்,புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளவர்கள், அதிக எடையுள்ளவர்கள், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதுகெலும்பில் பிரச்சினை உள்ளவர்கள் போன்றவர்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் விறைப்பு குறைபாடு ஏற்படும்.

எந்த வயதில் ஏற்படும்?

சென்ற தலைமுறை வரை இருந்த ஆண்களுக்கு விறைப்பு பிரச்சினை என்பது 50 வயதுகளில் மட்டுமே ஏற்பட்டது. சில ஆரோக்கியமான ஆண்களுக்கு 70 வயது தாண்டியும் விறைப்பு பிரச்சினை ஏற்படாமல் இருந்தது. அதற்கு காரணம் அவர்களின் ஆரோக்கியமான உணவுமுறையும், ஒழுக்கமான வாழ்க்கை முறையும்தான்.

இப்போதைய தலைமுறை

விறைப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட ஆண்களிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 37 சதவீத ஆண்களுக்கு 30 வயதுகளிலேயே விறைப்பு குறைபாடு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அவர்களின் மோசமான வாழ்க்கை முறைதான். இதில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகம் புகைபிடிப்பது உங்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகம் புகை மற்றும் மது அருந்துபவர்களுக்கு சராசரியாக விறைப்பு குறைபாடு ஏற்படும் வயது 34 என்று கணக்கிடப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

விறைப்பு பிரச்சினையை கட்டுப்படுத்துவது நமது கைகளில்தான் உள்ளது. ஆரோக்கியமான உணவுமுறைக்கும் மாறுவதும், எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், தீய பழக்கங்களை தவிர்ப்பதும்தான் இதற்கான முதல் வழி. இவை மட்டுமின்றி சில மருந்துகள், ஆண்குறி ஊசி சிகிச்சை, ஆணுறுப்பு ப்ரோஸ்தீசிஸ், கவுன்சிலிங் போன்ற முறைகளின் மூலமும் இந்த குறைபாட்டை குணப்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button