33.6 C
Chennai
Friday, May 31, 2024
27 1501136743 8
ஆண்களுக்கு

பெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!

நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு வெளித்தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கான சில ப்யூட்டி டிப்ஸ்

க்ளன்சிங் :
ஆண்களுக்கு அதிகப்படியாக வியர்வை வரும். சுத்தமாக முகத்தை பராமரிக்கவிட்டால் அதுவே நம் அழகை கெடுக்கும் விதமாக பருக்களை உண்டாக்கிடும். இதனை தவிர்க்க முகத்திற்கு க்ளன்ஸிங் செய்ய வேண்டியது அவசியம். முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி, பரு,போன்றவற்றை தவிர்க்கும்.

முடி : ஆண்களின் புற அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவில் அதிகப்படியான விட்டமின் இ இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள் ஏனென்றால் முடியின் வேர்களுக்கு வலுசேர்க்கும். அதிக வாசமுள்ள ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

ஷேவிங் : ஆண்களின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக இந்த ஷேவிங் மாறிவிட்டிருக்கிறது. ஷேவிங் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும் ஆனால் ஷேவிங் செய்த பின்னர் முகத்தில் ஏற்படும் அரிப்பு, நிறம் மாறுதல் போன்றவற்றல் பல சங்கடங்களை சந்தித்திருப்பீர்கள். அப்படியிருப்பவர்கள், முதலில் தாடியை சூடான நீரில் நனைத்துக் கொள்ளுங்க்ள். பின்னர் மாய்ஸ்ரைசர் தடவிடுங்கள் சிறிது நேரம் கழித்து ஷேவிங் க்ரீம் தடவி ஷேவ் செய்யுங்கள்.

சன்ஸ்க்ரீன் : வெயில் படும் இடங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் தடவ வேண்டியது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்கீர்னில் SPF ரேட்டிங் குறைந்த அளவு இருக்க வேண்டும். வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே சன்ஸ்க்ரீன் தடவிக் கொள்ளுங்கள்.

காது மற்றும் மூக்கு : வாரம் ஒரு முறையாவது காது மற்றும் மூக்குகளில் வளரும் முடிகளை நீக்கிடுங்கள். காதுகளுக்கு வெளியில் வளர்ந்திருக்கும் முடிகளை நீக்க, பியர்ட் ட்ரிம்மரை பயன்படுத்தலாம். ரேசர் ப்ளேட் பயன்படுத்தினால் அது சில நேரங்களில் காயங்களை ஏற்படுத்திடும். மூக்குகளில் உள்ள முடியை நீக்க மெனிக்யூர் சிசரை பயன்படுத்தலாம்.

கைகள் : ஒருவரை சந்திக்கும் போது கை குலுக்கி நட்பு பாராட்டுவது இயல்பு அது ஒரு வகை நாகரீகமும் கூட. கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.கைகளில் அதிக முடி இருப்பவர்கள் ரெகுலராக ட்ரீம் செய்திடுங்கள். ஒரு இன்ச்சுக்கு நீளமாக முடி வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். நகங்களையும் சுத்தமாக பராமரியுங்கள்.

சருமம் : ஆண்களுக்கு அதிகப்படியாக சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் வறட்சி அதிகமானால் அது பல்வேறு சரும பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் சருமத்திற்கு வறட்சி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

சத்தான ஆகாரம் : புறத்தோற்றத்திற்கு மிக அத்தியாவசியமானது உணவு, காலை உணவை தவிர்ப்பது வெறும் சிகரெட்டையும் டீயையும் மட்டும் குடித்துவிட்டு பசியை மந்தப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உங்கள் தோற்றத்தையும் கெடுத்திடும். அடிக்கடி டீ குடித்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும் என்பதால் அடிக்கடி டீ குடிப்பதை தவிர்த்திட வேண்டும்.

27 1501136743 8

Related posts

ஆண்களின் ஆரோக்கியத்தை குறி வைக்கும் 7 அபாயங்கள்!….

sangika

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….

sangika

என்னென்ன பொருள்களை ஷேவிங் கிரீமுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் !..

sangika

ஆண்களே! ஒரே க்ரீம் கொண்டு வெள்ளையாக வேண்டுமா?

nathan

ஆண்களே! ஹேண்ட்சம் பாய் போல காட்சியளிக்க சில சிம்பிளான வழிகள்!!!

nathan

தாடியின் வளர்ச்சியை வேகமாக தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!!!

nathan

இது ஆண்களுக்கு மட்டுமே….!

nathan

உள்ளாடை அணிவதில் தினந்தோறும் ஆண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகள்!!!

nathan

திருமணத்தின் போது ஆண்கள் முக்கியமாக செய்ய வேண்டியவை….

sangika