25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
feet1
கால்கள் பராமரிப்புஅழகு குறிப்புகள்

குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில் சில டிப்ஸ்!….

குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில், கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பைத் தவிர்க்கலாம்.

பாதத்தில் குதிகால் வெடிப்பு வந்துவிட்டதா? அப்ப இத போடுங்க

எங்கு சென்றாலும் செருப்புக்களை அணிந்து சென்றாலும், பாதங்களில் குதிகால் வெடிப்பானது வந்துவிடும். இதற்கு காரணம் போதிய பராமரிப்பு பாதங்களுக்கு கிடைக்காததே ஆகும்.

மேலும் வெடிப்புக்கள் அதிகமானால், பாதங்களில் இரத்த வடிதல் ஏற்படுவதோடு, கடுமையான வலியும் ஏற்படும்.

எனவே குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில், கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பைத் தவிர்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும்.

இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.

feet1

குதிகால் வெடிப்புகளை நீக்க, கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, கால்களுக்கு சாக்ஸ் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கால்களை கழுவ வேண்டும்.

இதனை தினமும் பின்பற்றி வந்தால், பாதங்கள் மென்மையாவதோடு, குதிகால் வெடிப்புகளும் நீங்கிவிடும்.

வாழைப்பழத்தை நன்கு மென்மையாக அரைத்து, அதனை பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அன்றாடம் இதனை செய்து வரை குதிகால் வெடிப்புகள் நீங்கும்.

பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் உலர வைத்து, பாதங்களின் மேல் எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் கழுவினால், குதிகால் வெடிப்பு வருவதை அறவே தவிர்க்கலாம்.

தேனில் அதிகப்படியான ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அதனை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அந்த நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை ஸ்கரப் செய்தால், அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.

குதிகால் வெடிப்பை போக்க சிறந்த நிவாரணி என்றால் அது ஆலிவ் ஆயில் தான். அதற்கு ஆலிவ் ஆயிலை காட்டனில் நனைத்து, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, சாக்ஸ் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஓட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது ஜிஜோபோ ஆயில் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் இரவில் படுக்கும் போது, நல்லெண்ணெயை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து படுத்தால், குதிகால் வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், பாத வறட்சியையும் தவிர்க்கலாம்.

Related posts

சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும்

nathan

கண்கள் அழகா இருந்தும் புருவம் சரியாக இல்லையா? பலன் தரும் இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்…..

nathan

கவலை வேண்டாம்..!! வறண்ட உதடுகளா உங்களுக்கு?

nathan

அடேங்கப்பா! சந்திரமுகி 2 படத்தின் மாஸ் தகவல்..!!!! படப்பிடப்பு துவங்கிய வேகத்தில் வசூல் வேட்டை.

nathan

பிரபல நடிகை பளீச்! மதுவுக்கு அடிமையானேன்.. அது இல்லனா தூக்கமே வராது

nathan

குளிர்கால குறிப்புகள்

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

அம்மாடியோவ் சிம்புவின் சொத்து மதிப்பு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க!

nathan

முகத்திற்கு இரவில் போடும் கிரீம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan