29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
pakatkai1
ஆரோக்கியம்

தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் இத்தனை நன்மைகளா?

பாகற்காயில் ப்ரோடின் மற்றும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து பாகற்காய் சாறு சாப்பிட்டு வந்தால் ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும்.

பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சீறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. கைகளில் ஏற்படும் அரிப்பு, கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல் தடிப்பு,சொரியாஸிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காயை ஜீஸ் சாப்பிட வேண்டும்.

pakatkai1

பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால், இது செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு, கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகின்றன.எனவே கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் சேர்த்துக்கொண்டால் பலன் பெறலாம்.

பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும், பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும், பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை, அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும்.

பாகற்காயை ஜீஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு, இரத்த கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்த கோளாறு போன்றவற்றிற்கு பாகற்காய் சிறந்த மருந்தாகும்.

ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்டிருக்கும் காலரா மற்றும் வாந்தி பேதியை போக்க இரண்டு டீஸ்பூன் பாகற்காய் இலையின் சாறு, இரண்டு டீஸ்பூன் டீத்தூள், வெங்காயச்சாறு இரண்டு டீஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு டீஸ்பூன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும். காலரா குணமாகும் வரை சாப்பிடவேண்டும்.

பாகற்காயை சருமத்தின் மேல் உபயோகித்தால் அது அழகு சம்பந்தமான பயன்களை கொடுக்கும். உடல் நலத்தை நன்கு பாதுகாத்து கொள்ள பாகற்காய் சாறு உபயோகப்படுகிறது. தோல் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்கு இது பயன்படுகிறது.

பாகற்காய் சாறு அருந்துவதால் தோல் மற்றும் கூந்தலுக்கு தேவையான பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்-சி மற்றும் நார்சத்துகள் கிடைக்கின்றன.

தினமும் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்.அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

Related posts

தொப்பையை குறைக்கும் மந்திர சக்தி கொன்ட அன்னாசிப்பழம்!

nathan

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

nathan

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

சருமத்தைப் புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்..

nathan

உங்களுக்கு தெரியுமா நெற்றியில் சந்தனம் வைத்தால் என்ன நடக்கும்?

nathan

போதிய தண்ணீர் குடிக்காமை எற்படுத்தும் பாதிப்புக்கள் அளப்பரியது!….

sangika

சந்தன மரங்கள் அதிகம் பயன் தருபவை……

sangika

பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள்…

sangika

இரவில் பால் குடிக்கலாமா..?

nathan