காரணம் 1
சாணக்கியரின் கருத்துப்படி, பெண் அல்லது ஆண் யாராவது கேள்விக்குரிய குணங்களுடன் இருந்தால், மனைவியோ, கணவனோ தங்கள் துணையை ஏமாற்றினாலோ அல்லது திருமணத்திற்கு வெளியே வேறு ஏதாவது உறவில் இருப்பது உங்கள் திருமண வாழ்க்கையை நொடியில் சிதைத்துவிடும்.
காரணம் 2
எந்தவொரு பெண்ணும் தன் கணவன் தன்னை அதிகமாக கட்டுப்படுத்துவத்தையோ, எதிர்பாலினத்துடன் நட்பாக பழகுவதையோ சந்தேகப்படுவதோ அல்லது தடுப்பதோ விரைவில் அவர்களை மனைவியின் எதிரியாக மாற்றும். இது ஆண்களுக்கும் பொருந்தும். யாராக இருந்தாலும் தங்களுக்கான இடைவெளியில் மற்றவர்கள் நுழைவதை விரும்பமாட்டார்கள்.
காரணம் 3
கணவனோ அல்லது மனைவியோ அவர்களுக்கு இடையே இருக்கும் காதலையோ, உறவையோ குறைவாக மதிப்பிடுவதோ அல்லது மதிக்காமல் நடப்பதோ அவர்களின் தனிப்பட்ட நெருக்கமான தகவல்களை வெளியில் சொல்வதோ ஒருவர் மீது மற்றொருவருக்கு மிகப்பெரிய வெறுப்பை உண்டாக்கும். திருமண வாழ்க்கையை சிதைக்கும்.
காரணம் 4
எந்தவொரு பெண் பேராசையில் பொருளின் மீது பற்றுக்கொண்டு தன் வாழ்க்கை மற்றும் குடும்ப பொறுப்புகளை தட்டிக்கழித்து விட்டு குடும்ப செல்வங்களை தவறாக பயன்படுத்துகிறாளோ, பெரியவர்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார்களோ, குழந்தைகளை கவனிக்காமல் நடந்துகொள்கிறார்களோ அவர்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்றவர்கள். விரைவில் அவர்களின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கும் சாணக்கியர் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
அறிவுரை 1
அனைத்து ஆண்களுக்குமே அழகான பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் ஆசை இருக்கும். ஆனால் சாணக்கியரின் கூற்றுப்படி ஒரு பெண்ணின் அழகை காட்டிலும் அவளின் குடும்ப பின்னணி மிகவும் முக்கியமானது. அழகான பெண் ஒழுக்கமில்லா குடும்பத்தில் இருந்தாலும் அவளை திருமணம் செய்துகொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
அறிவுரை 2
ஒரு ஆண் எப்பொழுதும் சமூகத்தில் தனக்கு இணையான அந்தஸ்து உள்ள குடும்பத்திலோ அல்லது அதற்கு கீழே உள்ள குடும்பத்தில்தான் திருமணம் சம்பந்தம் கொள்ள வேண்டும். ஒருபோதும் தன் தகுதிக்கு மீறிய இடத்தில் திருமண பந்தம் வைத்துக்கொள்ள கூடாது. அவ்வாறு வைத்துக்கொண்டால் சமூகத்தில் அவன் மதிப்பை இழக்க நேரிடும்.
அறிவுரை 3
அழகில்லாத பெண்ணாக இருந்தாலும் அவளுக்கு குடும்பத்தின் மதிப்பு நன்கு தெரிந்திருந்தால் அந்த பெண்ணை கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்துகொள்ளுங்கள். அப்படிப்பட்ட பெண் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதுடன் உங்கள் இரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருப்பாள்.
அறிவுரை 4
ஆண், பெண் இருவருமே தங்கள் துணை மீது சமமான அளவில் காதலுடன் இருக்க வேண்டும். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு இதுதான் அடிப்படையாகும். ஒருவேளை இதை ஒருவர் செய்ய தவறினால் குறைந்தபட்சம் நேர்மையாகவும், மற்றவர்களின் உணர்ச்சிகளையும் மதிக்கவும் வேண்டும். இல்லையெனில் உங்கள் திருமண வாழ்க்கை தோல்வியில்தான் முடியும்.
அறிவுரை 5
பெண்களுக்கென சாணக்கியர் முக்கியமான ஒரு அறிவுரையை கூறுகிறார். தன் கணவனுக்கான சேவையை எப்பொழுதும் முழுமையாக செய்யவேண்டும். இதுதான் பெண்களுக்கு இருக்கும் முதல் சவால் ஆகும். ஆனால் இதனை காரணமாக கொண்டு ஆண்கள் எப்பொழுதும் பெண்களை தகுதி குறைவாக நடத்துவதோ, அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படடுத்துவதோ கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் சமூகத்தில் மதிப்பை இழக்க தயாராக இருக்கவேண்டும்.
அறிவுரை 6
ஒரு ஆண் எப்பொழுதும் மனைவியை மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ காயப்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர்கள் குடும்ப உறவை இழக்க தயராகிக்கொள்ளுங்கள். அதேபோல மற்ற பெண்ணுக்காக எப்பொழுதும் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. இது உங்கள் குடும்பத்தில் தீராக்கவலைகளை உண்டாக்கும்.