29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
10 tips lechuga
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள உண்ணும் உணவுகளும் முக்கியம்!

அழகு என்பது வெறும் வெளிப்பூச்சுகளால் வருவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். சரும அழகிலிருந்து கூந்தல் ஆரோக்கியம் வரை சகலத்துக்கும் காரணம், நாம் உண்கிற உணவு என்கிற விழிப்பு உணர்வு பலருக்கும் இல்லை. அழகையும் ஆரோக்கியத்தையும் தக்கவைத்துக்கொள்ள உண்ணும் உணவுகளும் முக்கியம். வெளிப்பூச்சுக்கு மேற்கொள்கிற பராமரிப்பும் அவசியம்.

அதிகம் மெனக்கெடாமல் அழகை வசமாக்கிக்கொள்ளும் உள்ளே வெளியே டிப்ஸ் தருகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

ஒரே பொருளை வெளிப்பூச்சுக்கும் பயன்படுத்தலாம், அதையே உள்ளுக்கும் எடுத்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட டூ இன் ஒன் சிகிச்சைகள் இவை.

10 tips lechuga

ஒரே நேரத்தில் உங்கள் சருமமும் கூந்தலும் பொலிவு பெறுவதை உணர்வீர்கள். தினம் ஒரு சிகிச்சையாக, பத்து நாள்களுக்கொன்றாகப் பின்பற்றலாம்.

ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தயிர், அரை ஆரஞ்சுப்பழத்தின் ஜூஸ்… இந்த மூன்றையும் ஒன்றாகக் கலக்கவும். 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

முகத்தில் தடவியது காய்கிறவரை காத்திருக்கும் நேரத்தில் இன்னொன்றையும் செய்யலாம். 2 டீஸ்பூன் தேன், ஒரு டம்ளர் ஆரஞ்சுச்சாறு இரண்டையும் கலந்து குடிக்கவும்.

தயிர் ஒரு டீஸ்பூன், புதினா இலைகள் 5, ஒரு டீஸ்பூன் தேன்… இந்த மூன்றையும் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

தயிர் 3 டீஸ்பூன், பாகற்காய் ஒரு துண்டு, உப்பு ஒரு சிட்டிகை, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அதனுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கவும்.

கேரட் ஜூஸ் 3 டீஸ்பூன், அரிசிமாவு 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சையின் சாறு மூன்றையும் கலந்து முகம் மற்றும் முழங்கையில் கறுப்பான பகுதிகளில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

2 கேரட்டில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் ஒரு சிட்டிகை உப்பு, புதினா இலைகள் 10, 2 டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கவும்.

தேன் அரை டீஸ்பூன், வெள்ளரிச்சாறு 2 டீஸ்பூன், தக்காளி பாதி, ஒரு முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை கால் டீஸ்பூன் இவற்றை ஒன்றாகக் கலக்கவும். முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

வெள்ளரிக்காய் ஒன்று, ஒரு எலுமிச்சையின் ஜூஸ், தோல் சீவிய இஞ்சி ஒரு துண்டு, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி 4 டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

ஒரு தக்காளி, ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டி பவுடர் இரண்டையும் சேர்த்துக் குழைக்கவும். முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.

2 தக்காளி, 2 கேரட், பாதியளவு பீட்ரூட் மூன்றையும் அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை எலுமிச்சையின் சாறு, 2 டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கவும்.

ஆப்பிள் துண்டுகள் 4, வெள்ளரிக்காய் துண்டுகள் 4, அரை டீஸ்பூன் தயிர் சேர்த்து அரைத்து முகத்தில் பூசவும். விரல்களால் வட்டமாக மேல்நோக்கி மசாஜ் செய்து கழுவவும்.

ஆப்பிள் ஒன்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் தேன், சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குடிக்கவும்.

மாதுளை ஜூஸ் ஒரு டீஸ்பூன், பால் ஒரு டீஸ்பூன், பாதாம் விழுது அரை டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

மாதுளை ஜூஸ் ஒரு கப், பாதாம் 2, பால் ஒரு கப், குங்குமப்பூ 2 எல்லாவற்றையும் அரைத்து அப்படியே குடிக்கவும்.

3 டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, 1/3 டீஸ்பூன் கடலை மாவு, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

எலுமிச்சை ஒன்று, புதினா இலைகள் 10, உப்பு ஒரு சிட்டிகை, சர்க்கரை 4 டீஸ்பூன் சேர்த்து அரைத்து வடிகட்டிக் குடிக்கவும்.

பாதி வாழைப்பழம், விதை நீக்கிய 4 பேரீச்சை இரண்டையும் ஒன்றாக அரைக்கவும். முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

வாழைப்பழம் ஒன்று, பேரீச்சை 2, ஒரு டம்ளர் பால் சேர்த்து அரைத்துக் குடிக்கவும்.

பப்பாளிப்பழத் துண்டுகள் 2, கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன், பால் ஒரு டீஸ்பூன், சர்க்கரை கால் டீஸ்பூன் எடுத்து எல்லாவற்றையும் கலந்துகொள்ளவும். முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து கழுவவும்.

ஒரு கப் பப்பாளிப்பழத் துண்டுகளுடன் 2 டீஸ்பூன் தேன் அரைத்துக் குடிக்கவும்.

Related posts

உணவுக்கு பின் வெற்றிலை மெல்லுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தாலே பல நோய்கள் தீர்ந்து விடும்!

nathan

கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைய…

nathan

தெரிஞ்சிக்கங்க…பீர்க்கங்காயை சாப்பிடுவதால் என்ன மாதிரியான நோய்கள் குணமாகிறது தெரியுமா?

nathan

உடல் பருமனா? உங்களுக்கான டயட்

nathan

நீங்கள் உணவுவகைகளை சமைக்கும்போது செய்யும் தவறுகள்?இத படிங்க!

nathan

உம்களுக்கு தெரியுமா தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை..!!

nathan

வறுத்த பூண்டுகளை சாப்பிட்டு பாருங்கள்! எந்த அளவு நன்மைன்னு புரியும்

nathan

அஜீரண பிரச்சனையை குணமாக்கும் புதினா சூப்

nathan