29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
karupaddi
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்க இத செய்யுங்கள்!…

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனை நீரில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இந்த பனை நீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனை வெல்லம் என்றும் அழைப்பர். இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றாகும். பழங்காலத்தில் எல்லாம் இனிப்புச் சுவைக்காக கருப்பட்டியைத் தான் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள்.

கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். மேலும் கருப்பட்டி கெமிக்கல்கள் ஏதும் சேர்க்காமல் இயற்கையாக வெறும் பனை நீரைக் காய்ச்சி தயாரிக்கப்படுவதால், அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியம் மேம்படும். கருப்பட்டி அடர்ந்த நிறத்தில் இருக்கும். இதில் உள்ள மருத்துவ குணத்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகள் அகலும்.

சரி, இப்போது சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது பனை வெல்லத்தை காபி, டீயில் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.

karupaddi

ஆற்றல்

கருப்பட்டியில் உடலின் அத்தியாவசிய செயல்பாட்டிற்குத் தேவையான கார்போஙைடரேட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை ஒருவர் குடிக்கும் காபி அல்லது டீயில் சேர்த்துக் குடிப்பதால், கலோரிகளின்றி உடலின் ஆற்றல் அதிகரிக்கும். ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் சர்க்கரையில் கலோரிகள் மிகவும் அதிகம் என்பதை மறக்க வேண்டாம்.

மலச்சிக்கல்

உணவு உட்கொண்ட பின் கருப்பட்டியை சிறிது உட்கொண்டால், அது செரிமான உறுப்புக்களைத் தூண்டி, எளிதில் செரிமானம் நடைபெறச் செய்யும். அதுவும் கருப்பட்டி உடலினுள் செல்லும் போது அசிட்டிக் அமிலமாக மாறி, வயிற்றில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை அதிகரித்து, எளிதில் செரிமானமாகச் செய்யும். ஒருவரது உடலில் செரிமானம் சீராக நடைபெற்றால், குடலியக்கமும் சீராகி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும்.

இரத்த சோகை

கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.

சுத்தமான கல்லீரல்

கருப்பட்டியை ஒருவர் தொடர்ச்சியாக எடுத்து வந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை சீராக்கும். மேலும் கருப்பட்டி கல்லீரலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றி, கல்லீரலை சுத்தம் செய்ய உதவும்.

சளி மற்றும் இருமல்

சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டுமானால், அன்றாடம் குடிக்கும் காபி, டீயில் கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் மூக்கடைப்பில் இருந்து விடுதலை அளிப்பதோடு, தொண்டை புண்ணையும் சரிசெய்யும்.

பிஎம்எஸ்

தற்போது பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிஎம்எஸ் பிரச்சனைக்கு கருப்பட்டி நல்ல தீர்வை வழங்கும். பொதுவாக பிஎம்எஸ் இருந்தால், களைப்பு, எரிச்சலூட்டும் தன்மை, பலவீனம் மற்றும் தசைப் பிடிப்புகள் போன்றவற்றை சந்திக்கக்கூடும். ஆனால் கருப்பட்டியை சேர்ப்பதால், உடலில் இருந்து சந்தோஷமான மனநிலையைத் தரும் எண்டோர்பின் என்னும் ஹார்மோன்கள் வெளியிடப்பட்டு, பிஎம்எஸ் பிரச்சனை குறைவதைக் காணலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பொட்டாசியம், மக்னீசியம், காப்பர், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்றவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, கிருமிகள் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். ஒருவர் தினமும் கருப்பட்டியை உட்கொண்டால், நோய்கள் அண்டாமல் தடுக்கலாம்.

சுவையூட்டி

கருப்பட்டி ஒரு இயற்கைச் சுவையூட்டி. இதில் கெமிக்கல் ஏதும் கலக்கப்படாமல் தயாரிப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானது. மேலும் கருப்பட்டி சேர்த்து சமைக்கும் எந்த ஒரு இனிப்பு பண்டமும் மிகவும் சுவையாக இருக்கும். எனவே இன்று முதல் உணவில் கருப்பட்டியை பயன்படுத்தும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

இதயம் மற்றும் இரத்த அழுத்தம்

கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் சீராக்கி, இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கும்.

நரம்பு மண்டலம்

கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.

ஒற்றைத் தலைவலி

கருப்பட்டி அல்லது பனை வெல்லம் ஒற்றை தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு கருப்பட்டியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது குடிக்கும் டீயில் கருப்பட்டி சேர்த்து குடிப்பதன் மூலமும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

விக்கல்

அடிக்கடி விக்கல் வருகிறதா? அப்படியெனில் வெதுவெதுப்பான நீரில் இஞ்சி பவுடர் மற்றும் கருப்பட்டி சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் விக்கல் உடனே நின்றுவிடும்.

தாய்ப்பால்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கருப்பட்டியை உணவில் சேர்ப்பன் மூலம், குழந்தைக்கு சுத்தமான தாய்ப்பால் கிடைக்கும். இதனால் குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

நீர் தேக்கம்

உப்பிய வயிறு மற்றும் உடலில் நீர் தேக்க பிரச்சனை கொண்டவர்கள், கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இப்பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, உடனடி நிவாரணமும் கிடைக்கும்.

Related posts

சுவையான இறால் வறுவல் செய்ய வேண்டுமா….? முயன்று பாருங்கள்

nathan

ப‌ச்சை ‌மிளகாயை பாதுகா‌க்க

nathan

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆரோக்கியத்தைத் தரும் கொத்தமல்லி தோசை

nathan

நீரிழிவு நோயாளிகள் சிவப்பு ஆப்பிள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா அளவுக்கு மீறி சாப்பிட்டால் பாதாமும் நஞ்சு தான்! இத முதல்ல படிங்க..!

nathan

தெரிந்துகொள்வோமா? சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் வீட்டு நிவாரணிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த கொதிப்பை அடக்கும் உணவு பொருள்!

nathan