தேவையானப்பொருட்கள்:
சின்னதாக நறுக்கிய புடலங்காய் துண்டுகள் – ஒரு கப்,
பாசிப் பருப்பு – கால் கப்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேகவிடவும். தேங் காய் துருவலுடன் பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து நைஸாக அரைக்கவும். புடலங்காய் துண்டுகளை வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து… வெந்த புடலங்காய், பாசிப் பருப்பு, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து, நன்கு கொதித்த பின் இறக்கி பரிமாறவும்