பனைமரங்களை நமது ஊர் பகுதிகளில் அதிகமாக காணலாம். பல குடும்பங்கள் இந்த பனை மரத்தை நம்பி தான் தங்களது வாழ்க்கையையே நடந்தி வருகின்றன. இந்த பனைமரத்திற்கு அதிக நீர் தேவையில்லை… வெயில் காலத்தில் கூட இது சூப்பராக வளரும். இந்த பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன்படும் விதமாக தான் உள்ளது.. இந்த பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.
நமது முன்னோர்கள் முதலில் பனை ஓலையினால் கூரை வேய்திருந்தனர், பனை மரத்தினால் கதவுகள், வீட்டிற்கான கட்டுமானங்களை செய்தனர்.. பனை கிழங்கை உண்டனர், நுங்கு அவர்களது உடலுக்கு குளிர்ச்சியை அளித்தது, பனங்கற்கண்டு, பனங்கருப்பட்டி முதலியவற்றை தான் அவர்கள் இனிப்பிற்காக பயன்படுத்தி வந்தனர்… இந்த பகுதியில் பனங்கற்கண்டின் நன்மைகள் பற்றி காணலாம்.
நெல்லிக்காய் சாறுடன்
நெல்லிகாய் சாறுடன் இந்த பனங்கற்கண்டை கலந்து மருத்துவரின் ஆலோசனையுடன் சர்க்கரை நோயாளிகள் இதனை பருகி வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
மார்பு சளி
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
சர்க்கரை நோயாளிகளுக்கு
நமது முன்னோர்கள் சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தி வந்த இந்த பனங்கற்கண்டில் கால்சியம், இரும்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் மொத்தம் இருபத்தி நான்கு வகையான இயற்கைச் சத்துகள் நிறைந்துள்ளதால் இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கிடைத்த ஒரு அமிர்தம் என்று தான் சொல்ல வேண்டும்.
வாதம்
பனங்கற்கண்டானது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை நீக்குவதுடன் இதை உண்பவர்களை திடகாத்திரத்துடன் இருக்கச்செய்யும்.
வயிற்று புண்
வயிற்று புண் நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். நீண்ட நாட்களாக வயிற்றுப் புண்ணால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு இந்த பனங்கற்கண்டு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வாயிலிருந்து புகை வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதிப்படுபவர்கள், கொத்தமல்லி கஷாயத்தில் பனங்கற்கண்டை கலந்து பருகினால் விரைவிலேயே வயிற்றுப்புண் குணமாகும்.
மாதவிடாய் பிரச்சனை
மாதவிடாய் பிரச்சனை என்பது இன்றைய பெண்களை அச்சுறுத்தும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், எள்ளு கஷாயத்தில் திரிகடுகு சூரணத்தோடு தேவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தி வந்தால் மாதவிடாய் சீராகும்.
பாலுடன்..
பாலுடன் கலந்து உண்ண வேண்டிய மருந்துகளில், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இந்த பனங்கற்கண்டை சேர்த்து பயன்படுத்தலாம்.. இதனால் மருந்து முழு வீரியத்துடன் செயல்படும்.
ஆரோக்கியமளிக்கிறது
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கு
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும்.
பற்களுக்கு
இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
பனங்கற்கண்டு பால்
பனங்கற்கண்டு பால் வெள்ளை சர்க்கரை கலந்த பாலை விட சிறந்தது. இந்த பனங்கற்கண்டு பாலுடன் சிறதளவு ஏலக்காய் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும். வயிற்றுபுண், வாய்ப்புண் போன்றவை நீங்குவதோடு, தூக்கமும் நன்றாக வரும்.
ஆண்மை அதிகரிக்க
குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது