face cream
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

இந்த பருவ காலத்தில் சில எளிய வீட்டு பராமரிப்பு முறை

குளிர் காலம் வந்தாலே போதும் குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்து விடும். இது அனுபவிப்பதற்கு சந்தோஷமாக இருந்தால் கூட நமது சருமத்திற்கு ஏராளமான தீமைகளை ஏற்படுத்தக் கூடியது.

இந்த குளிர் காலத்தில் வறண்ட, தோல் உரிகின்ற சருமம் ஏற்பட ஆரம்பித்து விடும். எனவே இந்த பருவ காலத்தில் நமது சருமத்திற்கு என்று ஸ்பெஷல் பராமரிப்பு தேவைப்படும். சில எளிய வீட்டு பராமரிப்பு முறைகளைப் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

face cream

மில்க் க்ரீம் மற்றும் தேன்

மில்க் க்ரீம் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க பயன்படுகிறது. தேன் நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழித்து முகத்தில் ஏற்படும் பருக்களை போக்குகிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலில் 1 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வைத்து இருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். பிறகு நன்கு துடைத்து விட்டு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும்.

கோக்கோ பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் கோக்கோ பட்டர் ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இதனுடன் இஞ்சி பேஸ்ட் சேர்க்கும் போது சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்குகிறது. ஒரு டேபிள் ஸ்பூன் கோக்கோ பட்டர் மற்றும் ஆலிவ் ஆயில், 1/2 டீ ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் அப்ளே செய்து கொள்ளுங்கள். 15-20 நிமிடங்கள் வைத்து இருந்து அப்புறம் கழுவுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வாழைப்பழம் மற்றும் பால்

உங்களது சருமம் வறண்டு காணப்பட்டால் பால் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பயன்படுத்தவும். அதே நேரத்தில் சருமம் எண்ணெய் பிசுக்குடன் காணப்பட்டால் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பயன்படுத்துங்கள். வாழைப்பழம் இறந்த செல்களை நீக்கவும், பால் முகத்தை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. ஒரு பெளலில் பழுத்த வாழைப் பழம் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய்

நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க கற்றாழை ஜெல், பாதாம் எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் சேர்த்து பயன்படுத்துங்கள். இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு நீர்ச்சத்தை கொடுக்கும். 8-10 சொட்டுகள் பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து உங்கள் கைகளில் நன்றாக தேய்த்து கொள்ளுங்கள். இந்த கலவையை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் 15 நிமிடங்கள் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு அடுத்த நாள் முகத்தை கழுவி விடுங்கள்.

பப்பாளி மற்றும் பால்

பப்பாளி பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உங்கள் சருமம் மென்மையாக இருக்க உதவும். பாலில் நிறைய விட்டமின் ஈ உள்ளது. இது வறண்ட சருமத்தை போக்குகிறது. பாதி பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து நறுக்கி மசித்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி காய வைத்து பிறகு நீரில் கழுவவும்.

கேரட் மற்றும் தேன்

இந்த பேஸ் பேக் உங்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கக் கூடியது. இதிலுள்ள பீட்டா கரோட்டீன் வறண்ட சருமத்திற்கு உதவுகிறது. தேன் நமது சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. இது இறந்த செல்களை போக்கிடும்.

பயன்படுத்தும் முறை

1 தோல் நீக்கிய கேரட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காய விடுங்கள். பிறகு நீரைக் கொண்டு கழுவுங்கள். மேற்கண்ட பேஸ் பேக்குகள் குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது.

Related posts

சரும கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப சோள மாவு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

ஷேவிங் செய்யாமல் முகம், கை, கால்களில் உள்ள ரோமத்தை நீக்குவது எப்படி?

nathan

உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றும் இயற்கை பவுடர்

nathan

மகளின் பிறந்தநாளில் ஐஸ்வர்யா ராய்க்கு ஆதரவாகக் குவிந்த கமென்ட்டுகள்

nathan

யோகார்ட் முகத்திற்கு உபயோகப்படுத்தினால் என்னாகும் தெரியுமா?

nathan

2023 ஆண்களுக்கு எப்படி இருக்கப்போகுதாம் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா படை நோய்க்கு சிறந்த மருத்துவ குறிப்பு..

nathan

சூப்பர் டிப்ஸ்! ‘பளிச்’ முகத்துகு பலவித மாஸ்க்

nathan

பார்லர் வேண்டாம்: வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்

nathan