26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
problem 002
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்பெண்கள் மருத்துவம்

மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவுகிறது!…

மசாலா டீ

இந்த மசாலா டீ சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. இந்த மசாலா டீ தயாரிக்க உங்களுக்கு தேவையானது இஞ்சி, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மிளகு மற்றும் கிராம்பு. மசாலா டீ தயாரிக்க இந்த பொருட்களை எடுத்து அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் பாலை கொதிக்கவைக்கும்போது அதில் இந்த தூளை போட்டு கொதிக்க வைக்கவும். பின்னர் டீத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்டு வடிகட்டி

சர்க்கரை சேர்த்து குடிக்கவும். சிறிது கார சுவையுடன் கூடிய இந்த மசாலா டீ உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும்.

problem 002

குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புகள்

மசாலா டீ வழங்கும் நன்மைகளில் முக்கியமான ஒன்று இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புகள். ஒரு கப் மசாலா தேநீரில் 100 கலோரிகள் மற்றும் 0 சதவீத கொழுப்புகள் உள்ளது. இது உங்களுக்கு எடை குறைப்பிற்கு உதவுகிறது.

அது மட்டுமின்றி இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவாக அமையும்.

எதிர் அழற்சி பண்புகள்

மசாலா டீயில் அதிகளவு எதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. இதற்கு காரணம் இதில் உள்ள இஞ்சியும், கிராம்பும்தான். குறிப்பாக இது வீக்கத்தை கட்டுப்படுத்த உதவும்.

இந்த மசாலா பொருட்கள் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் மேலும் வளர்ச்சிதை மாற்றத்தையும் சீராக்கும்.

சளிக்கு மருந்து

இதில் உள்ள இயற்கை பொருட்கள் இயற்கை மருந்தாக செயல்படக்கூடியது. குறிப்பாக இது சளிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இதில் உள்ள கிராம்பு மற்றும் இஞ்சி பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

எனவே நீங்கள் ஒருவேளை சளியால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு மசாலா டீ மிகச்சிறந்த தீர்வாகும்.

வீக்கத்தை தடுக்கும்

இது உங்கள் ஆரோக்கியத்தில் அற்புதத்தை நிகழ்த்தக்கூடும். இது உள்ளுறுப்புகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதுடன் செரிமானத்தையும் சீராக்கும். இந்த மசாலா டீ உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத வாயு மற்றும் நீரை வெளியேற்ற உதவுகிறது.

தினமும் ஒரு கப் மசாலா டீ குடிப்பது உங்கள் வீக்கம் மற்றும் வாயுக்கோளாறை நீக்க உதவும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் ஒரு நாள்பட்ட நோய் என்பதை நாம் அறிவோம். இந்த நோயால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தேவை சரியான சிகிச்சையாகும். இந்த கட்டத்தில், சத்தான உணவு உட்கொள்வது சர்க்கரைநோய் அபாயங்களைக் குறைக்க உதவும்.

இந்த மசாலா டீயை அடிக்கடி குடிப்பது உங்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

புற்றுநோயை மசாலா டீ தடுக்கும் என்பது ஆச்சரியமான தகவலாகும். இதற்கு காரணம் இதில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் தான். இந்த ஆன்டி ஆக்சிடண்ட்கள்புற்றுநோயை தடுக்க உதவும். இதில் உள்ள இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டையில் இயற்கையான புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

எனவே தினமும் மசாலா டீ குடிப்பது உங்கள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.

பிடிப்புகளை சரிசெய்கிறது

மசாலா டீ குடிப்பதன் முக்கிய பலன் சதைப்பிடிப்புகளை சரி செய்வதாகும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவுகிறது.

இது நரம்புகள் மற்றும் சதைகளில் ஏற்படும் பிடிப்புகளை சரிசெய்ய உதவலாம்.

இது மட்டுமின்றி மசாலா டீ மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

சிலர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனை சரிசெய்ய ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், சீரான உணவு முறையும் அவசியம். இந்த பிரச்சினைக்கு மசாலா டீ குடிப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

செரிமானத்தை சீராக்கும்

மசாலா டீ குடிப்பதன் மூலம் கிடைக்கும் மற்றொரு பலன் சீரான செரிமானம் ஆகும். இதில் உள்ள ஏலக்காய், கிராம்பு போன்றவை செரிமான மண்டலத்தை பலமாக்கும்.

அதுமட்டுமின்றி இஞ்சி செரிமானத்தை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு பொருளாகும். மேலும் இது மலச்சிக்கலை குணப்படுத்தக்கூடும்.

Related posts

சுவையான சமையலுக்கு சின்னதா சில டிப்ஸ்!…

sangika

உங்க வீட்டு குழந்தைகள் அடிக்கடி சண்டை போடறாங்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க நினைத்தால் இதனை அடிக்கடி எடுத்துக்கோங்க…!!!சூப்பரா பலன் தரும்!!

nathan

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகளை அகற்ற உதவும் பொருட்கள்!!!

nathan

இந்த காரணங்களுக்காக கருத்தரிப்பதை தள்ளி போடாதீங்க

nathan

இந்த உப்பு கொண்டு உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

nathan

நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பெறும் நன்மைகள்!

nathan

சமையல் மட்டும் முக்கியம் இல்லை இவற்றையும் கருத்தில் எடுங்கள்!

sangika

பெண்களே காலையில் டென்ஷன் இல்லாமல் வேலையை தொடர வேண்டுமா? அப்ப தினமும் செய்யுங்க…

nathan