24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
eyebrows before after
அழகு குறிப்புகள்

புருவங்களின் அழகை அதிகரிக்க இத தினமும் செய்யுங்கள்…

பெண்களின் முகத்திற்கு அழகு தருவதில் புருவங்களுக்கும் முக்கிய பங்குண்டு. சில பெண்களின் புருவங்கள் மிக அடர்த்தியாக இருக்கும். சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும்.

இவ்வாறு இரண்டு அமைப்பு கொண்ட புருவத்தினரும் அதனை சீர் செய்து அழகாக்கிக் கொள்வது அவசியம்.

eyebrows before after

அடர்த்தியான புருவங்கள் உள்ளவர்கள் அழகு நிலையங்களில் செய்யப்படும் திரெட்டிங்கை செய்துகொள்ளவும்.

அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் சிறிதளவு விளக்கெண்ணெயை புருவத்தில் தடவி வந்தால் புருவ ரோமங்கள் அடர்த்தியாக வளரும். வட்டமான முகமுடையவர்கள் வளைவாக திரெட்டிங் செய்யக்கூடாது.

புருவத்தின் நுனியில் வளைக்க வேண்டும். இதனால் மேலும் முகம் வட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சி அளிக்கும்.

சதுரமான முகம் உள்ளவர்கள் புருவத்தின் நடுவில் வளைவாக திரெட்டிங் செய்துகொண்டால் முகம் வட்டமாகக் காட்சி தரும்.

நீளமான முகம் கொண்டவர்கள் திரெட்டிங் செய்துகொள்ளும்போது, புருவத்தின் கடைசியில் சிறிது வளைத்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் முகம் பார்ப்பதற்கு வட்டமாக, அழகாகத் தெரியும்.

நீளவட்ட முகமுடையோர் கவனமாக திரெட்டிங் செய்தல் வேண்டும். புருவத்தின் கடைசியிலும் இல்லாமல், முதலிலும் இல்லாமல் சற்றே நகர்த்தி, லேசாக வளைத்து திரெட்டிங் செய்ய வேண்டும்.

இதனால் முகம் நீளவட்டமாகத் தெரியாமல் அழகாகக் காட்சியளிக்கும்.முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள். அழகாகத் திகழுங்கள்.

Related posts

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

எளிய தீர்வு.. கண்ணைச் சுற்றி பை போன்று இருக்கும் சதையை போக்கும் வழிமுறைகள்..!

nathan

முகம் பளபளப்பாக சில அழகு குறிப்புகள்…!

nathan

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்!!

nathan

தேவையற்ற ரோமங்களை வீட்டிலேயே இதற்கான இயற்கையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

nathan

நீண்ட நாள் இளமையாக இருக்க கழுதை பால்!

sangika

விழாக்கோலம் பூண்டிருக்கும் ஷாருக்கானின் மன்னத் இல்லம்

nathan

நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றவும் தேன் உதவுகிறது

sangika