தேவையானப்பொருட்கள்:
மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
வடித்த சாதம் – ஒரு கப்,
சர்க்கரை – 5 டீஸ் பூன்,
நெய் – தேவைக்கேற்ப,
பாதாம், முந்திரி – தலா 5,
தேன் – 5 டீஸ்பூன்.

செய்முறை:
நெய்யில் பாதாம், முந்திரியை வறுக்கவும். மாம்பழத்தை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வடித்த சாதத்துடன் மாம்பழ விழுது, தேன், சர்க்கரை, வறுத்த பாதாம், முந்திரி சேர்த்துக் கலந்து பரிமாறவும். குட்டீஸ்கள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.