25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Evening Snacks Mini samosa
சிற்றுண்டி வகைகள்அறுசுவைசமையல் குறிப்புகள்

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

தேவையானப்பொருட்கள்:

மைதா மாவு – ஒரு கப்,
பெரிய வெங்காயம் – 4,
பூண்டு – 10 பல்,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
– ஒரு டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

Evening Snacks Mini samosa
செய்முறை:

வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.

Related posts

பிரெட் பனீர் பணியாரம்

nathan

ரேஷன் அரிசியில் மொறு மொறுப்பான தோசை

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

கருப்பட்டி ஆப்பம்

nathan

சுவையான கார்லிக் பிரட் ரெசிபி

nathan

கொத்து ரொட்டி

nathan

இறால் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!​

nathan

பீர்க்கங்காய் தோல் துவையல்!

nathan

சைனீஸ் இறால் வறுவல்

nathan