anamai kuraibadu
அழகு குறிப்புகள்ஆண்களுக்குஆரோக்கியம்உடல் பயிற்சி

ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வர தினமும் இதை செய்து வாருங்கள்….

தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலக் கட்டத்தில் உடல்நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் அதிகம். இதன் பாதிப்பு ஆண்மைக் குறைவு வரை கொண்டுசென்றுவிடுகிறது. இதனால் பாலியல் விஷயங்களில் ஆர்வம் குறைந்துவிடும். இதனை சரிசெய்ய எளிய உட்டியாணா ஆசனத்தை செய்யலாம்.

விரிப்பில் இடைவெளி விட்டு கால்களை விரித்து நிற்கவும். இரண்டு கைகளையும் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவும். இடுப்புக்கு மேல் உள்ள உடல் பகுதியை மட்டும் முன் பக்கமாக சிறிது குனியும் படி வளைக்கவும்.

இந்த நிலையில் வயிற்று பகுதியில் இறுக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இதனைத் தொடர்ந்து சுவாசப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றை முழுவதுமாக வெளியில் விடவும்.

anamai kuraibadu

வயிற்றை உள்ளுக்குள் இழுத்து, ஐந்து அல்லது பத்து விநாடிகளுக்கு அப்படியே நிறுத்தவும்.

மூச்சை மெதுவாக இழுத்தவாறு வயிறை தளர்த்தவும். பிறகு நிமிர்ந்து, சாதாரண மூச்சை இரண்டு மூன்று தரம் இழுத்து விட்டு மறுபடி மேற்சொன்னது போல் திரும்பவும் செய்யவும்.

மலச்சிக்கல், அசீரணம், வாய் துர்நாற்றம், பலவீனம் ஆகியவை விலகும். இடுப்பு சதைகள், இனவிருத்திக் கோளங்கள், அது தொடர்பான தாதுப்பை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமடையும்.

ஆண்மை மிகுதிப்பட்டு, நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆஸ்துமா போன்ற மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு நல்ல பலன் தரும். 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் செய்யக் கூடாது.

வயிற்றில் அறுவை சிகிச்சை, வயிற்றில் புண் இருப்பவர்கள், இதய பலவீனம் உள்ளவர்களும் ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

Related posts

தவறான அழகு குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்….

sangika

இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்

sangika

சீரியல் நடிகை பரீனாவை கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..

nathan

முகப் பரு, கரும் புள்ளிகள் குறைந்து பொலிவுடன் காண அரிசி ஃபேஸ் பெக்!…

sangika

நிறைய க்ரீம்லாம் போட்டு சருமம் தொங்கி போச்சா… இந்த 5 வீட்டு வைத்தியத்தை செய்ங்க…

nathan

நீரிழிவு நோயிலிருந்து விடுபட 4 உடற்பயிற்சிகள்

nathan

கருப்பை நீர்க்கட்டிகளை கரைக்க என்ன செய்யலாம் என்பதற்கான சில டிப்ஸ்..

nathan

பளிங்கு போன்ற முகம் வேண்டுமா..??

nathan

இதை உட்கொண்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை விரைவில் சரிசெய்யலாம்!…

sangika