24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
DSC03395
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

குழந்தை, பிறந்த ஓராண்டுக்குள் மொட்டை அடிக்காமல் விட்டு விட்டால்…

என்னாகும் தெரியுமா? குழந்தை, பிறந்த ஓராண்டுக்குள் மொட்டை அடிக்காமல் விட்டு விட்டால்…

பச்சிளம் குழந்தை, பிறந்து ஒரு வருடத்திற்குள் அந்த குழந்தைக்கு

மொட்டை ( #HeadShave ) அடிக்கவேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகி விடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு. ஒருவேளை மொட்டை அடிக்காமல் விட்டுவிட்டால் என்னாகும். அதுகுறித்த‍ பின்ன‍ணி தகவல்களை இங்கு விரிவாக காண்போம்.

பிறந்த குழந்தைக்கு மொட்டை போடுவது ஏன்? ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

நாம் அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கைவைத்திருந்தாலே கை கழுவியபிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில் தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.

DSC03395

அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை ( #HeadShave ) அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படிகூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.

எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின் செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை ( #HeadShave ) அடிப்பர் அதற்கு காரணம், ஒரு வயதில் அடித்த மொட்டை ( #HeadShave ) யில் சிலகழிவுகள் வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும்.

இதற்காகவே ஒருவயதிலும், மூன்று (3) வயதிலும் மொட்டை ( #HeadShave ), சாமியி ன் பெயரில் அடிப்பர். இதன் உண்மை பின்னணியே இதுதான். முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும். அதை கண்டுகொள்ளாமல் பிறகு மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டுவிட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை அதீத அளவு ஏற்படுத்தும்.

Related posts

மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா செய்முறை

nathan

நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஜீரண சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழ ரைத்தா

nathan

உடனடி எனர்ஜி வேண்டுமா? உங்களுக்கான 9 உணவுகள்

nathan

3 சீக்ரெட்ஸ் – டயட். ஆக்டிவ். ரிலாக்ஸ்.

nathan

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்

nathan

உங்களுக்கு உலர்திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

nathan

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

nathan

உடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan