26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
vomit
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்மருத்துவ குறிப்பு

எதுக்கலிப்பதற்கான சில பொதுவான அறிகுறிகள்….

வயிற்றுப்பகுதி

வயிற்றுப் பகுதியில் இந்த குழாய் சரியாக மூடப்படாத நேரத்தில் இந்த அமிலம் மீண்டும் உணவு குழாய் வழியாக திரும்பி செல்ல நேரலாம். இதனால் ஒரு வித எரிச்சல் மற்றும் வலி உண்டாகும். இதனை நாம் எதுக்கலித்தல் என்று கூறுவோம்.

இந்த நிலை உண்டாகும்போது அதனைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள் உண்டு. அதனை நாம் இந்த பதிவில் காணலாம்.

அறிகுறிகள்

எதுக்கலிப்பதற்கான சில பொதுவான மற்றும் நாம் ஏற்கனவே அறிந்த சில அறிகுறிகள் உண்டு. அவற்றை இப்போது காணலாம்.

vomit

நெஞ்செரிச்சல்

வாந்தி

தூக்கமின்மை

பசியின்மை

நெஞ்சு வலி

மூச்சுத் திணறல்

பேசுவதில் கடினம்

தொண்டை வலி

மூச்சு விடுவதில் சிரமம்

எதுக்கலித்தல் உண்டாவதற்கான காரணம்

உணவுக் குழாயின் கடைசி தசை சரியாக இயங்காமல் இருப்பதால் இந்த பாதிப்பு உண்டாகலாம். மேலும் சில உணவுகள் கூட எதுக்கலிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.

உதாரணமாக,

காரமான மசாலா உணவுகள்

நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்கலித்தலை ஊக்குவிக்கும் உணவாக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவுகள் காரணமாக உள்ளன. இத்தகைய உணவுகளில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நாள்பட்ட இரைப்பை சவ்வு அழற்சி உண்டாகலாம்.

காபி

காபியில் உள்ள காபின் இந்த பாதிப்பிற்கு காரணமாக உள்ளது. எதுக்கலித்தலை அதிகரித்து, வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது காபின்.

மதுபானங்கள்

மதுபானங்கள் உணவுக்குழாயின் உயர்வான மற்றும் தாழ்வான சுருங்கு தசைகளை நெகிழ்த்துவதால் , வயிற்றில் உள்ள அமிலம் மேலே எழும்பி இதனால் எதுக்கலித்தல் ஏற்படுகிறது.

சாக்லேட்

சாக்லேட்டில் கொழுப்பு, காபின், தியோப்ரோமின் போன்றவை இருப்பதால், வயிற்றில் அமில உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

கொழுப்பு உணவுகள்

இத்தகைய கொழுப்பு உணவுகள் இரைப்பையை எரிச்சல் அடையச் செய்து, தாழ்வான உணவுக்குழாய் சுருங்கு தசையை பாதிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் உண்டாகிறது.

அமில உணவுகள்

இத்தகைய உணவுகள், வயிற்றில் pH அளவை குறைக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்கலித்தல் பாதிப்பு அதிகரிக்கிறது.

நல்ல உணவு முறையால் உடலின் எந்த ஒரு பாதிப்பும் சரி செய்யப்படலாம். பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியம் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவு வகைகள் ஒரு ஆரோக்கிய உடலுக்கு சிறந்த தேர்வாக உள்ளன.

அமில எதிர்ப்பு உணவுகள்

உடனடியாக எதுக்கலித்தலைப் போக்க உதவும் சில இயற்கை உணவுகளைப் பற்றி நாம் இப்போது காணலாம்.

உருளைக் கிழங்கு ஜூஸ்

ஒரு கிளாஸ் உருளைக்கிழங்கு சாறு எதுக்கலிப்பதை எளிதில் நிறுத்த உதவுகிறது.

பச்சை உருளைக்கிழங்கு ஜூஸ் ஒரு சிறந்த தீர்வாகும். இதன் சுவை மற்றும் நிறம் காண்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், இதன் நன்மைகள் ஏராளமாக இருந்து உடனடியாக எதுக்கலிப்பை நீக்குகிறது.

தேவையான பொருட்கள்

துருவிய உருளைக்கிழங்கு 3 ஸ்பூன்

ஒரு கப் தண்ணீர்

செய்முறை

ஒரு கப் தண்ணீரில், துருவிய உருளைக் கிழங்கை போட்டு வேக விடவும்.

பிறகு 10 நிமிடம் அதனை ஆற வைக்கவும்.

பிறகு அந்த கலவையை மிக்சியில் அரைக்கவும்.

ஒவ்வொரு முறை எதுக்களிக்கும்போதும் இந்த நீரை பருகவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை அமில தன்மைக் கொண்ட பழமாக இருப்பினும், அது வயிற்றை அடையும்போது அதன் அதிகரித்த அமிலத்தன்மை சமன் செய்யப்படுகிறது.

தேவையான பொருட்கள்

ஒரு கப் தண்ணீர் (250 மிலி )

6 ஸ்பூன் எலுமிச்சை சாறு (90 மிலி)

செய்முறை

தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும்.

வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை பருகவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

நெஞ்செரிச்சல், ப்ரெஷர், தொண்டை எரிச்சல் போன்ற இரைப்பை பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கை தீர்வாக கருதப்படுவது ஆப்பிள் சிடர் வினிகர்.

தேவையான பொருட்கள்

ஒரு கப் தண்ணீர் (250மிலி)

2 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் (30 மிலி)

செய்முறை

தண்ணீர் சார்ந்த எந்த ஒரு தயாரிப்பையும் செய்வதற்கு முன்னர், அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி கொள்வது நல்லது.

தண்ணீர் நன்றாக கொதித்தவுடன், சிறிது ஆறிய பிறகு, அதில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்க்கவும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நரம் முன்னதாக இந்த நீரை பருகவும்.

வாழைப்பழ ஜூஸ்

வாழைப்பழம், சளி சுரப்பதை தூண்டி, வயிற்று பகுதியை இரைப்பை அமிலத்திடமிருந்து பாதுகாக்கிறது. மேலும், இந்த பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த கனிமம், வயிற்றின் pH அளவை பராமரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்

4 கப் தண்ணீர் (1 லிட்டர்)

4 வாழைப்பழம்

செய்முறை

வாழைப்பழத்தின் தோலை உரித்து, தண்ணீருடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

ஒரு நாள் முழுவதும் இந்த நீரை குடித்துக் கொண்டே வரவும்.

Related posts

இந்த 5 ராசிக்காரங்க அனைவர் மீதும் உண்மையான அன்பு வைக்கிறவங்களா இருப்பாங்களாம்…

nathan

சூப்பர் டிப்ஸ்! பெண்களே வெள்ளைபடுதல் குணமாக இதோ அருமையான பாட்டி வைத்தியம்..!

nathan

மனைவியை எப்பொழுதும் மகிழ்விக்க என்னென்ன செய்யலாம்?

nathan

எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாடிக் எடுப்பவரா நீங்கள்? அப்ப அவசியம் இத படிங்க…

nathan

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இதை படியுங்கள்! ஆண்களையும் தாக்கும் மார்பகப் புற்றுநோய்: வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோ

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாவுக்கு என்ன நன்மை?

nathan

அவசியம் படிக்க..இரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்

nathan

குடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது எப்படி?

nathan