Trataka asana
யோக பயிற்சிகள்ஆரோக்கியம்

இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். …..

பெயர் விளக்கம்: கண்களை தூய்மைபடுத்தும் பயிற்சியே த்ராடகா.

செய்முறை: ஒரு சிறிய முக்காலி அல்லது நாற்காலியின் மேல் எரியும் குத்து விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை வைக்கவும். அங்கிருந்து ஒரு மீட்டருக்கு பின்னால் அனுகூலமான தியான ஆசனத்தில் உட்காரவும். தீபத்தின் சுடர் கண்களுக்கு நேராக இருக்கட்டும். கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதும் தளர்வாக இருக்கட்டும்.

Trataka asana

மெதுவாக கண்களை திறந்து இமைக்காமல் தீபத்தின் சுடரை உற்றுப் பார்க்கவும்.  பயிற்சியின் போது தீபத்தின் சுடர் அசையாமல் ஒரே சீராக எரிய வேண்டும்.

முதலில் 1 முதல் 2 நிமிடம் உற்றுப் பார்க்க பழகவும் தொடர்ந்த பயிற்சியில் நேரத்தை அதிகப்படுத்தி 10 முதல் 15 நிமிடம் வரை செய்யவும்.

பயிற்சியின் இடை, இடையில் கண்களை மூடி புறத்தில் பார்த்த அக்னி சுடர், புருவ நடுவில் பிரகாசிப்பது போல் கற்பனையாக நினைத்துப் பார்க்கவும். பயிற்சியின் முடிவில் கண்களை மூடவும். உள்ளங்களையும் நன்றாக தேய்த்து மூடிய கண்களின் மேல் இரு உள்ளங்களையும் சில நிமிடம் வைத்திருக்கவும். சில நிமிடங்களுக்கு பிறகு முகத்திற்கு முன்பாக இருக்கும் கைகளை எடுத்து வலது உள்ளங்கையை கண்ணால் பார்க்கவும்.

பயன்கள்: கண்கள் சுத்தமாகி பிரகாசமடையும். பார்வை தெளிவாகும். உறக்கமின்மை, மன அழுத்தம், சோர்வு, படபடப்பு நீங்கும். நினைவாற்றல் மிகும். மன ஒருநிலைப்பாடு அதிகரிக்கும். மனதின் ஆற்றல் அதிகரிக்கும்

Related posts

கொழுப்பை கரைக்கும் கேரட்! சருமத்தையும் பளபளப்பாக்கும்

nathan

படுத்தநிலை ஆசனங்கள்

nathan

வாய் துர் நாற்றத்தைப் போக்க சில டிப்ஸ்!

sangika

தெரிஞ்சிக்கங்க… B- என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா ?

nathan

ஸ்லிம்மான தொடை பெற உடற்பயிற்சிகள்

nathan

தேன்………. உண்மை ……..

nathan

40 வயதிற்கு மேல் ஏற்படும் தொப்பையை தவிர்க்கலாம். அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது

nathan

தொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்

nathan

குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது எப்படி கண்டு பிடிப்பது….?

sangika