29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
yoga 2
யோக பயிற்சிகள்ஆரோக்கியம்

தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வது நல்லது…..

5000 ஆண்டுகள் பழமையான இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர்.

யோகா பலன்கள்:
முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ’டிவி’ பார்த்து செய்தால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளது. முறையாக செய்வதன் மூலம் பல அற்புத பலன்களை பெற இயலும்.
yoga 2
யோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்களை வராமல் தவிர்க்கலாம். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். முன்னால் குனியும் ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்ததை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளையும், ஞாபக சக்தியையும் பெருக்க முடியும்.
உளவியல் ரீதியாக மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் வகைகளை விட்டுவிட வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின் வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும்.
தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வது நல்லது.

Related posts

ஆண்மை அதிகரிக்க பனங்கற்கண்டின் நன்மைகள்!…

sangika

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika

தொப்பையை குறைக்கும் சலபாசனம்

nathan

சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருந்துகள்!…

sangika

பெண்களை கவர கூடிய கட்டுமஸ்தான உடலை ஆண்கள் பெறுவதற்கு இது உதவுவதாக கூறப்படுகிறது!…

sangika

தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று

nathan

முளைகட்டிய தானியங்கள் நல்ல ஆரோக்கிய பலன்களைத் தருகின்றன!

sangika

பெண்கள் எப்பொழுது வேண்டுமானலும் உடற்பயிற்சி செய்யலாமா

nathan

உடலையும் உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ் தெரியுமா?..

sangika