25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
waight loss
எடை குறையஆரோக்கியம்

உடல் எடையை எளிதாக குறைக்க ஒரு அற்புதமான வழி…..

உணவும் அதன் தன்மையும்..!

ஒவ்வொரு ஜீவ ராசிகளின் வாழ்க்கையிலும் உணவு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. நாம் வெறும் அரிசியையும், குழம்பையும் சாப்பிடுவதால் நமது உடல் எடை நிச்சயம் குறையாது. உடல் எடையை குறைப்பது மிக எளிமையான விஷயமாகும். ஆனால், அதற்கு ஒரு சிறிய கணக்கு தெரிந்தாலே போதும்.

அன்னாச்சியும் எலுமிச்சையும்…

மிக குறைந்த கலோரிகள் கொண்ட அன்னாச்சியும், சட்டென எடையை குறைக்க பயன்படும் எலுமிச்சையும் செய்கின்ற மகத்துவம் எண்ணில் அடங்காதவை. இவற்றை சேர்த்து சாப்பிடும் போது, செரிமான மண்டலத்தை சீராக வைத்து கொழுப்புக்களை கரைக்க செய்கிறது. எனவே, இவற்றின் இணை அதிக மகத்துவம் வாய்ந்தது.

தக்காளியும் ஆலிவும் எப்படி..?

மற்ற உணவு கலவையை போன்றே இவற்றின் சிறப்பும் அதிக ஆற்றல் பெற்றது. எண்ணற்ற நார்சத்து கொண்ட ஆலிவும், லிகோபேன் என்கிற ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களை அதிகம் கொண்ட தக்காளியும் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின் கலவை உங்களுக்கு அதிக பயனை தரும்.

waight loss

உருளைக்கிழங்கும் மிளகும்

எடையை குறைக்க உருளைக்கிழங்கை பயன்படுத்த கூடாது என பலர் சொல்லி இருப்பார்கள். ஆனால், இதனை தலைகீழாக மாற்றுகிறது இந்த கலவை. நீங்கள் உருளைக்கிழங்கில் மிளகை அதிகமாக தூவி பயன்படுத்தினால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும் என புதுவித ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

புது வித கலவை..!

ஒரு சில புதுமையான உணவுகளின் கலவை நமது உடலிற்கு அதிக நன்மையை தரும். அந்த வகையில் முட்டையும், அவகேடோ பழமும் முதன்மையான இடத்தில் உள்ளது. உங்களின் பசிக்கும் உடல் எடையை குறைக்கவும் இவை இரண்டும் சிறந்த உணவாகும். இவற்றை சாப்பிடுவதால் மிக எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்.

இப்படியும் ஒரு சேர்க்கையா..?

இந்த குறிப்பு மிக எளிமையான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது, விட்டமின்கள் நிறைந்த பாதாம்களையும், ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட யோகார்ட்டையும் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை சிக்கீரமாகவே குறைந்து விடுகிறதாம். மேலும், இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையுமாம்.

காபியும் இலவங்கமும்

நீங்கள் இந்த விதமான கலவையை பயன்படுத்தி பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால், இதன் பயன் பயங்கரமானது. அதாவது, காபியில் சிறிது இலவங்க பொடியை கலந்து சாப்பிடுவதால் உங்களின் உடல் எடை உடனே குறைந்து விடும். காலையில் இந்த வித காபியை குடிப்பது சிறந்தது.

தேனும் எலுமிச்சையும்

இந்த இரண்டின் மகத்துவம் நம் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இவை அற்புதமான வழியாகும். தேனையையும் எலுமிச்சையும் சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் பலனை நம்மால் பார்க்க முடியும். அத்துடன் உடலும் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கும்.

மூன்றின் சங்கமம்..!

உடல் எடையை எளிதாக குறைக்க ஒரு அற்புதமான வழி உள்ளது. அது தான் இந்த மூன்று உணவின் கலவை. அதாவது, இஞ்சி, ஆப்பிள், மற்றும் முளைக்கீரை ஆகிய மூன்றையும் சேர்த்து சாப்பிடுவதால் மிக விரைவிலே உடல் எடையை குறைத்து விடலாம் என ஆய்வுகள் சொல்கிறது. எல்லா விதத்திலும் இந்த மூன்றின் கலவை உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துமாம்.

வாழைப்பழமும் முளைக்கீரையும்

வாழைப்பழத்தின் மகத்துவம் ஏராளமானது. இதை முளைக்கீரையுடன் சேர்த்து சாப்பிடும் போது இதன் பயன்கள் இரட்டிப்பாக மாறுகிறது. குறிப்பாக உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்போர்க்கு இதன் கலவை அருமையான தீர்வாகும். மேலும், நீண்ட நேரம் இவை புத்துணர்வுடன் வைக்கவும் செய்கிறது.

Related posts

நோய்களை குணப்படுத்த சிறந்த மூலிகை சொடக்கு தக்காளி

sangika

தண்ணீர் குடிக்கும் போது இதையும் கவனத்தில் கொள்கிறீர்களா?…

sangika

பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்

nathan

உடல் எடையைக் குறைக்க

nathan

உடல் பருமனை குறைக்கும் வரகு அரிசி

nathan

எதுக்கலிப்பதற்கான சில பொதுவான அறிகுறிகள்….

sangika

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

nathan

கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

கோடை காலங்களில் பிரசவம் ஆன தாய்மார்கள் கவனிக்க வேண்டியது :தெரிந்துகொள்வோமா?

nathan