24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
cvpic6
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

இவை எத்தைனை நன்மைகளை தருகின்றன தெரியுமா?….

மகத்துவம் கொண்ட நீர்..!

கங்கை நீரை முன்பெல்லாம் நாம் அதிக மகத்துவம் பெற்ற நீரின் வரிசையில் வைத்திருந்தோம். அதே போன்று தான் ஒரு சில பழங்களின் கலவையால் உண்டான நீரும் ஏராளமான நலன்களை தனக்குள்ளே கொண்டுள்ளது. இதில் எலுமிச்சை மற்றும் அன்னாச்சி ஆகிய பழங்கள் அடங்கும். இவை இரண்டின் சாற்றை நீருடன் கலந்து குடித்தால் உங்களின் உடலில் நடக்கும் மாற்றங்கள் பல.

புற்றநோயிற்கு முற்றுப்புள்ளியா..?

எலுமிச்சை மற்றும் அன்னாச்சியில் கார தன்மை(alkaline) இயற்கையாகவே இருப்பதால் இவை புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றதாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். ஏனெனில், அல்கலைன் அளவு அதிகம் கொண்ட உடலில் புற்றுநோய் செல்கள் உயிர் வாழ இயலாதாம்.

சிறுநீரக கற்களுக்கு…

தேவையற்ற உணவு பழக்கத்தாலும், அன்றாட பழக்க வழக்கங்களாலும் நாம் நமது ஒவ்வொரு உறுப்புகளின் இயக்கத்தையும் சீர் அழித்து கொண்டே வருகின்றோம். அதில் உங்களது கிட்னியும் முதன்மையான இடத்தில் உள்ளது. கிட்னியில் ஏற்படுகின்ற கற்களை கரைய வைக்கின்ற தன்மை இந்த அன்னாச்சி எலுமிச்சை நீருக்கு உள்ளது.

cvpic6

செரிமான பிரச்சினைக்கு

இன்று பலர் அவதிப்படுகின்ற பிரச்சினைகளில் இந்த செரிமான கோளாறும் ஒன்று. பதில் 4 பேருக்கு இந்த பிரச்சினை இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. செரிமான பிரச்சினையை தீர்க்க இந்த எலுமிச்சை மற்றும் அன்னாசி சேர்த்த நீரே போதும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கி விடும்.

சட்டென எடையை குறைக்க

உடல் எடை கூடி விட்டதே என அவதிப்படுவோருக்கு ஒரு எளிமையான வழியை தருகிறது இந்த அன்னாச்சி, எலுமிச்சை நீர். இவை இரண்டின் கார தன்மை உங்களின் எடையை குறைக்க பெரிதும் உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், அடிக்கடி சாப்பிடும் பழக்கத்தையும் இது குறைத்து விடும்.

எதிர்ப்பு சக்திக்கு

உடலில் நோய்கள் நம்மை தாக்குவதற்கு காரணம் எதிர்ப்பு சக்தி குறைபாடுதான். இதனை எளிமையாக உயர்த்துகிறது இந்த நீர். இந்த இரு பழத்திலும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். எனவே, நோய்கள் உங்களை அண்டாமல் பார்த்து கொள்ளும்.

ரத்த அழுத்தத்தை சீராக வைக்க…

இந்த நீரானது ஒரு வித மூலிகை நீராக கருதப்படுகிறது. இவற்றை ஆயுர்வேத நீராகவும் ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இவற்றை குடித்து வருவதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும், உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோர்க்கும் இது சிறந்த தீர்வை தரும்.

என்றென்றும் இளமை..!

பலருக்கு நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது. இந்த ஆசையை நிறைவேற்ற ஒரு அற்புத வழி உள்ளது. அதுதான், இந்த நீர். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் முகத்தின் செல்கள் புத்துணர்வு பெற்று இளமையான அழகை நீண்ட காலம் தரும்.

கர்ப்பிணி பெண்களுக்கு

கர்ப்பிணிகளின் எலும்பு திசுக்களை வலுப்பெற செய்ய இந்த நீர் அருமையாக உதவும். மேலும், கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற சளியையும், ஜலதோசத்தையும் தடுக்க இந்த நீர் பெரிதும் பயன்படும். மேலும், அதிக ஆற்றலையும் இந்த அன்னாச்சி எலுமிச்சை நீர் தருகிறதாம்.

பற்களின் வலிமைக்கு

பற்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முடிவுகட்ட என்னென்னமோ செய்வார்கள். ஆனால், பல் வலியை மிக விரைவாக போக்குவதற்கு இந்த நீர் ஒன்றே போதுமாம். பல் வலிகளில் இருந்து நிவாரணம் தருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related posts

தூங்குவதற்கு முன் கிரீன் டீ குடிக்கலாமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கையான டூத் பேஸ்ட் வீட்டிலேயே செய்யலாம்!

nathan

புறந்தள்ளும் காய்கறிகளில் உண்டு எல்லையற்ற பலன்கள்

nathan

வாகனம் ஓட்டுபவர்களுக்கு வரும் முதுகு வலிக்கு டாட்டா சொல்லுங்க

nathan

இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வியா?

nathan

பெண்களே 40 வயதை கடந்துவிட்டீர்களா!

nathan

இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?/DOES DRINKING IS GOOD TO HEART?

nathan

சாப்பிட்டவுடன் சூடான தண்ணீர் அருந்தலாமா?

nathan

ஜாதிக்காய் தீமைகள்

nathan