25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
palak vegetable curry SECVPF
அறுசுவைசமையல் குறிப்புகள்

பாலக் டோஃபு கிரேவி ருசி தெரியுமா உங்களுக்கு…..

தேவையான பொருட்கள்

டோஃபு – 300 கிராம்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – 3 துண்டு

பிரியாணி இலை – 1
வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு
பால் – கால் கப்
சோள மாவு – 1 டீஸ்பூன்

palak vegetable curry SECVPF

பசலைக்கீரை சமைப்பதற்கு…

பசலைக்கீரை/பாலக் – 4 கப்
பூண்டு – 2 பற்கள்
பச்சை மிளகாய் – 1
தண்ணீர் – 1/2 கப்


எப்படிச் செய்வது?

* பசலைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்..

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* டோஃபுவை மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய் – 1, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வைத்து கீரையை வேக வைக்கவும்.

* வெந்த கீரையை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய, பின் மசாலா பொடி அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறிய பின் அரைத்து வைத்துள்ள கீரை கலவையை ஊற்றி, கிரேவி அதிகம் வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி, உப்பு சேர்த்து, மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

* கிரேவி பதம் வந்ததும் இறுதியில் அதில் டோஃபு சேர்த்து குறைவான தீயில் 7 நிமிடங்கள் வேக வைக்கவும்.

* பாலில் சோள மாவு சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து பச்சை வாசனை போக சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!!

Related posts

கேரளா மீன் குழம்பு

nathan

சுவையான காராமணி பொரியல்

nathan

சுவையான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

nathan

சுவையான காளான் பொரியல்

nathan

மெத்தி சிக்கன் குழம்பு

nathan

சுவையான திருச்சி ஸ்டைல் சாம்பார்

nathan

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan

அடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்!

nathan

பருப்பில்லாத இன்ஸ்டன்ட் சாம்பார்

nathan